உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை அரூர் டி எஸ் பி யின் பணி இடம் மாற்றம் வேண்டாம் - 🙏🙏🙏 தமிழக முதல்வர் / டிஜிபி மற்றும் கோவை ஐ ஜி அவர்களுக்கு அவசர எச்சரிக்கை மற்றும் வேண்டுகோள்🙏🙏🙏 by evidence parvai digital media
தமிழக முதல்வர் / டிஜிபி மற்றும் கோவை ஐ ஜி அவர்களுக்கு அவசர எச்சரிக்கை மற்றும் வேண்டுகோள்
தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதி பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய பகுதியாகும் இந்தப் பகுதியில் விவசாயம் கூலி தொழில்கள் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்களின் பிள்ளைகளை சில சாதிய கட்சிகளும் சில கஞ்சா வியாபாரிகள் சில மதவாத கட்சிகளும் அந்த இளைஞர்களின் மனதிலே ஊடுருவி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து அவர்களை சமூகத்தில் வளர்ச்சி அடைய செய்யாமல் சமூக விரோதிகளாக உருவாக்கி வரும் சூழல் கடந்த வருடம் வரை இருந்தது. ஆனால் யார் செய்த புண்ணியமோ என்று தெரியவில்லை, அரூர் பகுதிக்கு காவல் துணை கண்காணிப்பாளர் டி எஸ் பி ஜெகநாதன் அவர்கள் வருகை தந்த பின்பு இந்த ஊரில் அதிகப்படியான சாதி ரீதியான மோதல்கள் மதம் சார்ந்த மோதல்கள் கஞ்சா வியாபாரம், லாட்டரி சீட்டு, விற்பனை போன்றவைகள் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதற்கு முக்கிய காரணம் டிஎஸ்பி ஜெகநாதன் அவர்களே இவரை ஒரு வருடம் காலமாவது அல்லது வருகின்ற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரையாவது இவருடைய பணிகள் அரூர் பகுதியில் தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகவும் எவிடன்ஸ் பார்வை கள ஆய்வில் தெரிய வந்த நிதர்சனமான தகவல்..
நிச்சயம் இவர் உள்ளாட்சித் தேர்தல் காலம் வரை இருக்க வேண்டும் கூடுதலாக கூட இவர் இருக்கட்டும் காரணம் இங்கே இருக்கும் ஏழை சாதிய மக்கள் பெருமளவில் கஞ்சா மற்றும் மது போதை எனும் தவறான பாதைகளில் எளிதில் ஊடுருவி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர்.
அதற்கான காரணம் இங்கே பொருளாதாரம் ஆதிக்கம் கொண்ட அயோக்கியர்களின் கஞ்சா விற்பனை லாட்டரி சீட்டு விற்பனை சந்து கடை போன்ற வியாபாரத்தில் வரும் பணத்தின் தாக்கம் தான்..
டிஎஸ்பி ஜெகநாதன் அவர்கள் சாதி மதம் என்று பாராமல் யார் மோசடி செய்தாலும் யார் தவறு செய்தாலும் சட்டப்படியான நடவடிக்கை அவர் மேற்கொண்டு வந்தார்.
அது மட்டும் இன்றி காவல்துறை வட்டாரத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் பணியை செய்ய வைத்தவர், கட்டப்பஞ்சாயத்து செய்யும், நபர்கள், புரோக்கர்கள் என யாரும் காவல் நிலையம் உள்ளே நுழைய முடியாதுவாறு செய்தார் இதனால் பல மக்கள் அதாவது நீதியை தேடி வந்த மக்கள் காவல் துறையினர் மூலம் சரியான நீதியை கிடைக்க வைத்தவர் டிஎஸ்பி ஜெகநாதன் அவர்கள்.
மக்களுக்காக தனது பணியை சரியாக செய்யத் துணிந்தவர் இந்த அரூர் பகுதி சரியாக தலைநிமிர வேண்டும் என்றால் இளைஞர்கள் பாதுகாப்போடு தவறான பாதையில் இல்லாமல் சரியான வாழ்க்கையை தொடர வேண்டும்.
என்றால் ஒரு வருட காலமாவது அரூர் பகுதிக்கு டிஎஸ்பி ஜெகநாதன் அவர்கள் இருக்க வேண்டும்..
தயவு செய்து இவருடைய இடமாற்றம் மறுபரிசீனை செய்து அதை தடை செய்து அரூர் பகுதிக்கு மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை மற்றும் மக்களுடைய கோரிக்கையாக தங்களிடம் கூற கடமைப்பட்டுள்ளோம்.
அரூர் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் அரூர் பகுதி இளைஞர்களின் வாழ்க்கை பயணமும் சரியாக இருக்க வேண்டும் என்றால் தயவு செய்து கொஞ்சம் ஆய்வு செய்து டிஎஸ்பி ஜெகநாதன் அவர்களை இடமாற்றம் செய்யாமல் அரூர் பகுதிக்கு மீண்டும் ஒரு வருடம் பணியில் இருக்க தமிழக டிஜிபி தமிழக முதல்வர் கோவை மண்டல ஐஜி அவர்கள் எங்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என மீண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் நன்றி
இப்படிக்கு
எம் எஸ் பி மணிபாரதி
எவிடன்ஸ் பார்வை
டிஜிட்டல் மீடியா
Comments
Post a Comment