கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரூர் கோட்டாட்சியரை அவமானப்படுத்திய தருமபுரி தமிழ்ப் புதல்வன் திட்டம் நிகழ்ச்சி..! கோட்டாட்சியரை 1 மணி நேரம் நிற்க வைத்த விடியல் ஆட்சி
அரூர் கோட்டாட்சியரை அவமானப்படுத்திய தருமபுரி தமிழ்ப் புதல்வன் திட்டம் நிகழ்ச்சி..! கோட்டாட்சியரை 1 மணி நேரம் நிற்க வைத்த விடியல் ஆட்சி
மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் , கடும் கண்டனம்
திமுக அரசின் அராஜகங்களும் அட்டூழியங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது ஆணவத்தின் உச்சிக்கு செல்லும் நிலை நீடித்து வருகிறது
இதற்கு உதாரணமாக தர்மபுரி மாவட்டத்தில் திமுக அரசின் சார்பில் மாணவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் தமிழ் புதல்வன் நிகழ்ச்சி மூலமாக அரசு பள்ளியில் படித்து முடித்து தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 9ம் தேதி அரசு நிகழ்ச்சியாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சி தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் 5 மணிக்கு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் மாணவர்கள் 3 மணியிலிருந்து 5..30 மணி வரை இருக்கையில் அமர வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்
ஒரு வழியாக 5.30 மணிக்கு அரசு நிகழ்ச்சிக்கு மேடைக்கு வந்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் மாவட்ட செயலாளர் வரை அனைத்துக் கட்சியினரையும் மேடைக்கு அழைத்து வந்தார்
அப்போது தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் துறை அலுவலர் பால் பிரின்ஸ்லி, மாவட்ட எம்பி மணி மட்டுமே அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்
மற்ற இருக்கைகளில் திமுகவின் கட்சி உறுப்பினர் முதல், கிளைச் , ஒன்றிய , மாவட்ட செயலாளர் என அனைத்து தி.மு.கவினரும் இடம் பிடித்து சேரில் கம்பீரமாக அமர்ந்து கொண்டனர்
அப்போது அரூர் கோட்டாட்சியரும், நீதிபதியுமான வில்சன் இராஜசேகரனை நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் முடியும் வரை சுமார் 1.15 மணி நேரம் நாற்காலிகளின் அருகில் கால் கடுக்க வயதான நிலையில் அவரை நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியை கண்டு அரசு அதிகாரிகளும், கல்லூரி மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்
ஒரு கோட்டாட்சியரை 1 1/4 மணி நேரமாக அரசு நிகழ்ச்சியில் அமர வைக்காமல் கட்சியினரை மேடையில் உட்கார வைத்துக் கொண்டு ஏதோ கட்சி நிகழ்ச்சி போல அமைச்சர் நடந்து கொண்ட நிகழ்ச்சியை கண்டு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்
ஒரு அரசு நிகழ்ச்சியில் கோட்டாட்சியரை நிற்க வைத்துக் கொண்டு கட்சி உறுப்பினர்களை மேடையில் அமர வைக்கும் நிகழ்ச்சி ஆட்சியரை விட அதிகாரம் மிக்கது கட்சி பதவி தான் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கும் வகையில் திமுக அரசின் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் இந்த அராஜக செயல் ஆணவத்தின் உச்சத்தையே காட்டுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுநிலையினரும் தெரிவிக்கின்றனர்
மேலும் மாணவர்கள் மத்தியில் கட்சி தான் உயர்ந்தது ஆட்சி பணி அதைவிட கீழானது என உணர்த்தும் வகையில் திமுகவினர் நடந்து கொண்டதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்
Comments
Post a Comment