காவிரியில் வெள்ளப்பெருக்கு கர்நாடகா நிம்மதி அரசியல் கட்சிகள் கப்சிப் தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி தருமபுரி விவசாயிகள் கவலை காவிரி தண்ணீர் எங்கள் உரிமை கர்நாடக தண்ணீர் திறந்து விட வேண்டும்
காவிரியில் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா நிம்மதி
அரசியல் கட்சிகள் கப்சிப்
தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி விவசாயிகள் கவலை
காவிரி தண்ணீர் எங்கள் உரிமை
கர்நாடக தண்ணீர் திறந்து விட வேண்டும்
தமிழகம் வறண்டு கிடக்கிறது என சில மாதங்களாக விவசாய சங்கங்களும் சில அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்து அமர்க்களம் படுத்தினர்
தற்போது இயற்கை அன்னை தண்ணீருக்கு ஏன் தவிக்கிறீர்கள் எனக் கூறி கர்நாடகாவை கலங்கடித்து விட்டு கரை புரண்டு ஓடும் காவிரிஆறு பல லட்சம் கன அடி தண்ணீருடன் தமிழகத்திற்குள் புகுந்துள்ளது
இதனால் சில தினங்களில் மேட்டூர் அணை நிரம்பும் நிலை உருவாகியுள்ளது
உபரிநீராக காவிரி ஆற்றின் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கல்லணை சில தினங்களில் நிரம்பிக் கொள்ளும்
அப்புறம் என்ன செய்வார்கள்????
கர்நாடகாவில் இருந்து வரும் பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உருவாகும்
சரி இயற்கை அன்னை வழங்கிய மழைநீர் பெருக்கெடுத்து வரும்போது தமிழகத்தில் உள்ள பல லட்சம் ஏரி, குளம், குட்டை போன்றவை நிரம்பியுள்ளதா?????
அல்லது
ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையால் அனைத்து ஏரி குளம் குட்டைகளும் தண்ணீரைக் கொண்டு செல்ல திட்டங்கள் ஏதாகிலும் உள்ளதா??????
என்றால் கேள்வி குறியாக உள்ளது,
அண்டை மாநிலங்களுடன் அரசியல் செய்வது, ஆக்கப்பூர்வமான செயல்கள் எதையும் செய்வதில்லை என பொதுமக்கள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு கேள்வி கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது
சரி காவிரி டெல்ட விவசாயிகள் தண்ணீரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும்
தமிழகத்தின் தலைக்காவிரியான ஒகேனக்கல் தற்போது 70 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டினாலும்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி குளம் குட்டைகள் இன்னும் ஒரு சொட்டு தண்ணீரில் இல்லாமல் வரண்டு கிடக்கிறது
விஞ்ஞான உலகத்தில்
விண்வெளிக்கு சர்வசாதாரணமாக சென்று வரும் தற்போதைய சூழலில்
மேட்டூரில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு ராட்சச குழாய் மூலம் தண்ணீர் தினம் தோறும் பல ஆயிரம் கன அடி தண்ணீர் எடுத்து செல்லும் வியாபார நோக்கம் கொண்ட விஞ்ஞானம் இருக்கும் போது
விவசாயத்தில் கைதேர்ந்த தர்மபுரி விவசாயிகள் பாறை மிகுந்த மழை குன்றுகளிலும், மேடுகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து,, கிணறு வெட்டி பல லட்சம் செலவு செய்து தங்களால் முடிந்த பணப்பயிர்கள் ஆன கீரைகள், காய்கறிகள், பண மர வகைகள் போன்றவைகளை பற்றாக்குறை மிகுந்த பாறை நிலத்தில் தண்ணீர் எடுத்து அசத்தி வரும் நிலையில்
அரசின் பங்களிப்பு இதில் என்ன இருக்கிறது?????
என்று கேள்வியை தற்போது தர்மபுரி விவசாயிகள் கேட்கத் தொடங்கிய காலம் தொடங்கி விட்டது என்று கூறலாம்
காவிரி தண்ணீரால் தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும்
தர்மபுரி விவசாயிகள் வேதனையுடன் அண்டை மாவட்டம் மாநிலங்களுக்கு நவீன தினக்கூலி கொத்தடிமைகளாக செல்லும் நிலையில் நீடிக்கிறது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞான வளர்ச்சி குறைவாக இருந்த காலத்தில் கல்லணையைக் கட்டிய கரிகாலன் தமிழ் இனத்திற்கு சான்றாக திகழ்கிறார்
தற்போது விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் நாம்
தர்மபுரி மண்ணிற்கு காவிரி தண்ணீரை விவசாயத்திற்கு தர முடியாதா என்ன?,,,
ஆட்சியாளர்கள் அக்கரை எடுப்பார்களா?????
அல்லது தருமபுரி வாரி வழங்கிய பாரி அதியமானின் கொடையில் சிறந்த மண்ணாக மட்டுமே இருக்குமா?????
- செய்தி பேட்ரிக் அந்தோணி
Comments
Post a Comment