[7/30, 9:06 AM] Evidenceparvai: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
250 தீயணைப்பு மற்றும் NDRF வீரர்கள் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கேரள சிஎம்ஓவை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
[7/30, 9:07 AM] Evidenceparvai: கேரளாவின் வயநாட்டில் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இருந்து பேரிடர் மீட்பு பணிக்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மி-17 மற்றும் ஏ.எல்.ஹெச் காலை 7.30 மணிக்கு சூலூரில் இருந்து புறப்பட்டு சென்றன.
நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர்கள் மேற்பார்வையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழு அரசு இயந்திரமும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்றும் கேரள முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment