2021 ஆம் ஆண்டிலே அரூரை நகராட்சியாக உயர்த்துவோம் என வாக்குறுதி கொடுத்தவர் மாவட்ட செயலாளர் பழனியப்பன் - முல்லைரவி புகழாரம்
2021 ஆம் ஆண்டிலே அரூரை நகராட்சியாக உயர்த்துவோம் என வாக்குறுதி கொடுத்தவர் மாவட்ட செயலாளர் பழனியப்பன் - முல்லைரவி புகழாரம்
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லி சொல்லியே தர்மபுரியை பின்னுக்கு தள்ளி விட்டனர் இங்கே உள்ள தாழ்மை மனம் கொண்டவர்கள் தர்மபுரி உயர்த்துவோம் மக்களவை வளர்ச்சி அடைய செய்வோம் என்று உணர்ந்து தொழில் நிறுவனங்களை கொண்டு வருவதற்காக ஒன்று சேராமல் சுயநலத்தோடு கடந்து போன ஆட்சியாளர்கள் தருமபுரி மக்களை ஏமாற்றினார் கடந்த ஆட்சியில் உள்ள அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அறிவுரை நகராட்சியாக மாற்றுவோம் என சொல்லி மக்களை ஏமாற்றி வந்தனர் என அரூர் திமுக நகர கழக செயலாளர் முல்லை ரவி குற்றம் சாட்டினார்.
காலம் காலமாக பின் தங்கிய நிலையில் உள்ள ஏழை மக்களை எப்படி பொருளாதாரம் கொண்ட கயவர்கள் ஏமாற்றுவார்களோ அதே போல தமிழகத்தில் ஏழை மாவட்டமாக இருந்த தர்மபுரி மண்ணை அந்த மண்ணை நம்பி வாழும் மக்களிடத்தில் தர்மபுரியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் வளர்ச்சிகளைக் கொண்டு வருவோம் என்று சொல்லி ஏமாற்றியது அதிமுக.
காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் தர்மபுரியில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பாலக்கோடு அரூர் பென்னாகரம் தர்மபுரி கடத்தூர் மொரப்பூர் போன்ற பகுதிகளில் பெரிதளவிலும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை கடந்த 2021 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த ஆண்டில் தான் தர்மபுரி மாவட்டத்திற்கு நம்பிக்கை நாயகனாக மாவட்ட செயலாளர் அண்ணன் பழனியப்பன் அவர்கள் திமுகவில் இணைந்தார் அந்த ஆண்டு அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்படவில்லை ஆனாலும் எங்களுடைய கழகத் தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கையோடு நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை பொறுப்பை அண்ணன் பழனியப்பன் அவர்களிடம் கொடுத்தார் 2021 19ஆம் தேதி அரூர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட மற்றும் கூட்டணி தோழமை கட்சிகளுக்கும் ஆதரவாகவும் 18வது வார்டு உறுப்பினருக்கும் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அன்று அவர் கூறுகையில் நான் அதிமுகவில் இருக்கும் பொழுது அரூர் பகுதியை நகராட்சியாக மாற்ற வேண்டுமென கூறி இருந்தேன் ஆனால் அப்போது தர்மபுரியில் உள்ள சில அதிமுக முக்கிய நபர்களால் நபர்களால் அரூர் பகுதியை நகராட்சியாக மாற்ற இயலாமல் போனது.
இப்படி ஒவ்வொரு முறையிலும் தர்மபுரிக்கு பெரும் இழப்பை கொண்டு வந்தவர்கள் தற்பொழுது மக்களுக்கு நன்மையை செய்தோம் என சொல்லி நாடகமாடும் அதிமுகவினர் தருமபுரி மக்களுக்கு குறிப்பாக அரூர் பகுதிக்கு செய்த துரோகம்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் தர்மபுரி மக்களையும் தமிழக மக்களையும் காப்பாற்றக் கூடியது திராவிட முன்னேற்றக் கழகம் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள்தான்.
அந்த நம்பிக்கையில்தான் நான் திமுகவில் இணைந்தேன் திமுகவில் இணைந்த நம்பிக்கையால் நான் மக்களுக்கு உறுதியாக வாக்குறுதி கொடுக்கிறேன் தர்மபுரியில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் நிச்சயமாக தளபதி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் இடம் கடிதம் கொடுத்து நிச்சயமாக அரூரை நகராட்சியாக மாற்றி அமைப்போம் என வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்தார் அண்ணண் பழனியப்பன்.
அந்த வாக்குறுதிக்கு இணையாக 11 7 2024 அன்று தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க வருகை தந்த முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள்
அரூரை நகராட்சியாக மாற்றினார். இதனால் அரூர் வருங்காலத்தில் பெருமளவில் நல்ல வளர்ச்சியை பெரும்.
மேலும் தர்மபுரி அரூர் அதற்கு அடுத்தபடியாக பாப்பிரெட்டிப்பட்டி பாலக்கோடு போன்ற பகுதிகள் பெருமளவில் வளர்ச்சி எட்டும் மேலும் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகளை கொண்டு வந்து சுமார் 5000 பேர் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை உருவாக்கப்படும்.
மேலும் அதனால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வளர்ச்சி அடையும் இது திமுகவில் மட்டும் தான் நடக்கும். அதற்கான அடித்தளம் தர்மபுரியில் எங்களுடைய அண்ணன் மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களை போன்ற செயல் வீரர்களால் மட்டுமே செய்து முடிக்கப்படும் மேலும் அரூரை நகராட்சியாக கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்த மாவட்ட செயலாளர் அண்ணன் பி பழனியப்பன் அவர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் அரூர் மக்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவிக்கிறேன் என அரூர் திமுக பேரூர் நகர கழக செயலாளர் முல்லை ரவி கூறினார்
Comments
Post a Comment