மணிப்பூரில் பெண்களை நிர்வாண படுத்திய போதும்

பாண்டிச்சேரியில் பாஜக ஆட்சியில் 9 வயது குழந்தயை கற்பழித்து கொன்ற போது விவசாயிகளை டிராக்டர் ஏற்றி கொன்ற போது குரல் கொடுக்காத மாம்பழத்திற்க்கா எங்கள் ஓட்டு..எங்க ஜாதி காரன் நின்னாலும் வாய்ப்பில்ல ராஜா...திமுக வேட்பாளர் ஆ மணிக்கு படையெடுக்கும் பாமக நிர்வாகிகள்


வருகின்ற நாடுளுமன்ற தேர்தல் என்பது எளிதான தேர்தல் அல்ல..,


ஒவ்வொரு மனிதனும் உண்ணும் உணவிற்கும் பூமியில் இறங்கி பணியாற்றும் விவசாயத்திற்கும் சுதந்திரமாக உரிமைகளை கேட்க தேர்வு செய்யப்போகும் தேர்தல் களம் இது, 


இதுமட்டுமல்ல சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீடு செய்ய போகும் தேர்தல் களம் இது,  பாஜக போன்ற மதவாத கட்சிகள் ஆளும் மண்ணில் பெண்களுக்கு  சுதந்திரமாக நடப்பதற்கும் உரிமைகளை கேட்பதற்கும் வந்திருக்கும் தேர்தல் களம் இது.., 


நமக்கான உரிமைகளை நாமே உருவாக்கும் தேர்தல் களம் இது என்று மார்பை தட்டி சொல்லி ஆவேசமாக பேசத்தொடங்கிய முன்னாள்  தற்போதைய 

( பாமக நிர்வாகி நாதன் ) எங்களுடைய பாமக கட்சித்தலைவர் அன்புமணி ராமதாசு கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டணியில் இருக்கும்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். எதெற்கெடுத்தாலும் நாங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்று கூறும் பாமக கட்சித்தலைவர் அன்புமணி ராமதாசு ஏன் அப்போது குரல் கொடுக்கவில்லை ஏன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, 


பாஜகவுடன் சுமுகமான உறவில் இருந்த அன்புமணி ராமதாசு   எப்போது விவசாயிகளுக்கு நாங்கள்தான் சூர கொம்பு, நாங்கள்தான் பாதுகாப்புத்தடுப்பு சுவர்னு பேசுவாரு அப்படி இருக்கும் அன்புமணி ஏன்  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றிய மத்திய பாஜக உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை  கண்டித்து கண்டனம் தெரிவிக்கவில்லை, 


அப்போது மோடியை கண்டு பயமா இல்லை பொட்டி வாங்கும் திட்டமா ன்னு தெரியல காரணம் அன்றைக்கு நடந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது எவ்வளவு பெரிய கொடுமை அப்படி ஆட்சியை செயலாற்றும் பாஜகவுடன் எப்படி அன்புமணி கூட்ட்டணி வைத்தார், எங்களால் ஒரு துளி கூட ஏற்க முடியவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நாம இருக்கும் இந்த ஜனநாயக நாட்டில் பெண்களுக்காக பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்த தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவோம் என்று பேசிய அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்தவர் அன்புமணி அப்படி 

Comments