தர்மபுரி பிடமனேரி மாரியம்மன் கோவில் அருகில் தேமுதிக கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார் தலைமையில் மறைந்த விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜேந்திரநாத் கலந்து கொண்டு மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பிரகாஷ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து கிழக்கு மாவட்ட அமைத்தலைவர் தங்கவேல் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் பேரூர் கழக செயலாளர் குமார் நகரக் கழக செயலாளர் தேவ தேவன் இளைஞரணி துணை செயலாளர் செந்தாமரைக்கண்ணன் ஒன்றிய துணை கழக செயலாளர் ராஜேஸ்வரி சிவகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment