வெங்கடசமுத்திரம் ஒயின் ஷாப்.. சாலையோர மக்களின் வயிற்றில் அடிக்கும்.. திமுக அரசு..!! பாட்டிலுக்கு 5+10 ரூபாய் சம்பவம்... எடப்பாடி ஆட்ச்சியே பரவாயில்ல... கண்கலங்கும் குடி மகன்கள்..
வெங்கடசமுத்திரம் ஒயின் ஷாப்.. சாலையோர மக்களின் வயிற்றில் அடிக்கும்.. திமுக அரசு..!! பாடிலுக்கு 5+10 ரூபாய் சம்பவம்... எடப்பாடி ஆட்ச்சியே பரவாயில்ல... கண்கலங்கும் குடி மகன்கள்..
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பாட்டிலுக்கு 10 ரூபாய் 5 ரூபாய் என மதுபான கடை விற்பனையாளர்கள் மது பிரியர்களிடம் இருந்து வாங்கிய சம்பவம் குறித்து பல செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட தொடங்கிய நிலையில்...மது பாட்டில்கள் மோசடி என பெரும் எதிர்ப்புகள் எழுந்தன...மறைமுகமாக மது விற்பனையாளர்களிடம் கேட்கும் போது இந்த 10 ரூபாய் 5 ரூபாய் எல்லாம் அமைச்சர் செந்தி்பாலாஜி அவர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது என செய்திகள் பரவிய நிலையில் பல்வேறு கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் திமுக அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு மேல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என வாங்குபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு மது பிரியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மது பிரியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த உத்தரவுக்கு மீண்டும் திமுக அரசே எதிர்மறையான செயலை செயல் படுத்தி உள்ளது என்று மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக இன்று தர்மபுரி மாவட்டம் வேங்கட சமுத்திரம் அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடைகளில் மதுபான பாட்டில் வாங்குபவர்களுக்கு பாட்டில் மீது ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.. அதில் பத்து ரூபாய் என குறிப்பிட்டுள்ளது எதற்காக என்று கேள்வி எழுப்பிய பின்னர் பாட்டிலுக்கு மேல் பத்து ரூபாய் வாங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது காரணம் பொது இடங்களில் குடித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர்.
இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. என்று ஒரு பக்கம் தகவல் தெரிவித்த நிலையில் கூடுதலாக இந்த பத்து ரூபாய் வாங்குவது பெரும் மோசடி என மது பிரியர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் அது என்னவென்று கேக்கும் பொழுது மதுபான கடையில் மது பாட்டில்களை வாங்கி சென்று ஐந்து கிலோ மீட்டர் பத்து கிலோமீட்டர் தொலைவில் குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வார்கள் பத்து ரூபாய்க்காக வாகனத்தை எடுத்துக்கொண்டு மதுக்கடைக்கு வந்து பத்து ரூபாய் திரும்பி பெறப்போவதில்லை இதன் சூழலில் அந்த பத்து ரூபாய் மதுக்கடைக்கு லாபமாக இருக்கும் அது மட்டும் இன்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை அடுத்த நாள் மதுப்பிரியர்கள் எடுத்து வருவதற்கு தயக்கப்படுவார்கள் இப்படி ஒரு சூழல் இருக்கையில் ஏற்கனவே ஐந்து ரூபாய் ஒரு பாட்டிலுக்கு மேல் வாங்கப்படுகிறது... தற்போது பத்து ரூபாய் என்று ஒரு பக்கம் வாங்கும் போது மொத்தமாக 15 ரூபாயாக மதுபான கடையில் மோசடி செய்வது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதனால் மது பிரியர்கள் திமுக அரசின் மீது வன்மையான கண்டனத்தை தெரிவித்து எடப்பாடி ஆட்சியே பரவாயில்லை திமுக அரசு இவ்வளவு மோசமாக செய்கிறது என்று வேதனை அடைந்துள்ளனர். மற்றும் சாலையோரங்களில் குளித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர் என்று சொல்லும் அரசு நிர்வாகிகள் ஏன் சாலையோரம் மது குடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சுற்றுலா தலங்களோ, வனத்துறையோ, குடிப்பதற்கு எதற்கு அனுமதிக்க வேண்டும் அப்படி குடித்தார்கள் என்றால் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கேள்வி எழுந்துள்ளது. மதுபான கடைகளிலே பாட்டில்களை திரும்பிப் பெறும் பொழுது ஒரு பக்கம் சாலையோரங்களிலும் வேலையில்லாத வயதானவர்களும் ஆண்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர் காரணம் சாலையோர குடிசை வாழ் பகுதி மக்கள் அனைவருமே சாலையோரங்களில் கிடைக்கும் பயனற்ற இரும்புகள் மற்றும் மது பாட்டில்களை வைத்து தன்னுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் இந்த அரசின் செயல்பாட்டால் சாலையோர மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை ஒரு பக்கம் சிந்திக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம்...
அது மட்டும் இன்றி ஒரு பாட்டிலுக்கு மேல் தற்போது 15 ரூபாய் வாங்குவது மறைய மறைமுகமான மோசடி அரசின் நேரடியான மோசடி என மது பிரியர்கள் அழுத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் இதனை உடனடியாக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இது போன்ற செயல்களில் உண்மையாக அரசு வெளியிட்டிருக்கிறதா அப்படி வெளியிட்டு இருந்தால் அதை திரும்ப பெற்று இயல்பாக பாட்டிலில் நிர்ணயக்கபட்ட விலையில்தான் மது பாட்டில் விற்க வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
Comments
Post a Comment