பூமியில் அனைவருமே 'ஏவாளின் பிள்ளைகள்' தானா? மரபணு ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு
பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தெற்கு ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா பகுதிகளாக இன்று அழைக்கப்படும் இடங்களில் 150,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன் ஏவாள் வாழ்ந்திருப்பார் என்று அறியப்படுகிறது.
அவர் மனிதகுல வரலாற்றில் முதல் பெண் அல்ல. அவரது சகாப்தத்தின் ஒரேயொரு பெண் கூட அல்ல. ஆனால், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இதுவரை வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, அவரது காலத்திற்கு பிந்தைய ஒவ்வொரு தலைமுறை மனிதர்களிலும் அந்தப் பெண்ணுடைய மரபணுவின் (டிஎன்ஏ) ஒரு சிறு கூறு இருக்கத்தான் செய்கிறது.
பைபிளின் கூற்றுக்கு மாறான, அறிவியலின் இந்தக் கூற்றை புரிந்து கொள்ள மனித உடல் செல்களுக்குள் உள்ள செல்களின் ஆற்றல் சாலை என அழைக்கப்படும் ‘மைட்டோகாண்ட்ரியா’வை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.
Comments
Post a Comment