வாய்சவடால் திராவிட அரசு தருமபுரி பஞ்சமி நிலங்களை பறிகொடுக்கும் தலித் மக்கள்மீட்டு கொடுக்குமா மக்களுடன் முதல்வர் திட்டம்??.. தயார் நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி மக்கள்..!
வாய்சவடால் திராவிட அரசு
தருமபுரி பஞ்சமி நிலங்களை பறிகொடுக்கும் தலித் மக்கள்
மீட்டு கொடுக்குமா மக்களுடன் முதல்வர் திட்டம்??
நிலத்தை திருப்பித் தர மாட்டோம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 123 சாதி இந்துக்கள்
இந்திய அரசியலிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் அதிமுக, திமுக, திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தலித் மீதான பாசத்தை வாரி வழங்கும் உதிரி கட்சிகள் வாய் கிழிய சனாதனம் பேசுவதும், சமூக நீதிப் பேசுவது, இது பெரியார் மண், சமூக நீதியில் பிறப்பிடம் என வாய் புருடா விட்டு வருகின்றனர்
இவர்கள் தலித் மக்கள் மீது என்ன அக்கறை எடுத்தார்கள் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை தலித் மக்களுக்கு மீட்டுக் கொடுத்தார்களா? அதற்கான என்ன முயற்சி எடுத்தார்கள் என்று கேள்வி கேட்டால் மதிப்பெண் பூஜ்ஜியம் தான்
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகநீதியில் சம நிலைக்கு வர முடியாமல் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறார்கள், இவர்கள் கூலிக்காக உயர் சாதியினரிடம் கையேந்தி நிற்கக்கூடாது, அதனால் தான் சமூகநீதி கேள்விக்குறியாகிறது எனவே இவர்களை தலை நிமிரச் செய்வோம் என அப்போதைய ஆங்கிலேய அரசு 1892 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜேம்ஸ் பீரோ மென்ஸ்இயர் பெரு முயற்சியால் தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை, பல லட்சம் பேர் பயனடையும் வகையில் தலித் மக்களுக்கு உழுது உழைத்து சுயமரியாதையுடன் இருப்பதற்காக வழங்கப்பட்டது
அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆதிக்க சாதியினரின் கை ஓங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தலித் மக்களின் பஞ்சாங்க நிலங்களை கூறு போட்டு வாங்க துவங்கியுள்ளனர் சாதி இந்துக்கள் மீண்டும் தலித் மக்களை பரதேசிகளாக, பஞ்சம் பிழைக்க வந்தவர்களாக திட்டமிட்டு மாற்றப்பட்டு வருகின்றனர் கடந்த 75 ஆண்டுகளாக
அவைகளுக்கு இந்த திராவிட திருடர்களும் துணை போகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் பங்காற்றி தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் ஆரூர் பகுதி சார்ந்த முதுபெரும் தலைவர் கரியம்மாள் ஜயா தற்போது 90 வயதை கடந்தவர் , தர்மபுரி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் எங்கெங்கு உள்ளது, யாருடைய ஆக்கிரமிப்பில் உள்ளது, இவற்றை மீட்டெடுப்பது எப்படி, சட்டப் போராட்டங்கள் கையில் எடுப்பது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மனு கொடுப்பது போன்ற பெரும் காரியங்களில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வந்துள்ளார்
இவரது பெரும் முயற்சியால் சட்டப்படி தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பாக அரூர் வட்டாரத்தில் 85 பஞ்சமி நில பயனாளிகளும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 160 பயனாளிகளின் பட்டியலையும் சேர்த்து மொத்தம் 245 பஞ்சமி நில பயனாளிகளின் பட்டியலை சேகரித்து சட்டபூர்வமாக நீதிமன்றத்தை அணுகி தலித் மக்களுக்கு பயனாளிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவையும் பெற்றார்
அவற்றை அமுல்படுத்த வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டு ஒரு உத்தரவையும் நீதிமன்றத்தில் பெற்றுள்ளார் அந்த உத்தரவுப்படி அப்போதைய அரூர் கோட்டாச்சியர் காமராஜர், வட்டாட்சியர்கள், வருவாய் துறையினர் உடனடியாக பஞ்சமி நிலங்களை ஆய்வு மேற்கொண்டு அதில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலை எடுத்து அவர்களை அப்புறப்படுத்தி பயனாளிகள் அனைவருக்கும் அவரவர்கள் நிலங்களில் குடியேற சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
அதற்கான முயற்சி கடந்த 10 ஆண்டுகள் ஆகியும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள், இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை, தலித் மக்களை வைத்து பிழைப்பு நடத்தியவர்களும் எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள்
சரி சட்டப் போராட்டத்தின் மூலம் இவ்வளவு வெற்றி கண்ட முதுபெரும் தலைவர் கரியம்மாள் இவ்வளவு முயற்சி மேற்கொண்டு இருக்கும் நிலையில் நாங்கள் தலித் மக்களின் பங்காளி அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறோம் என கூறும் தலித் கட்சிகளும், திராவிட மாடல் அரசுகளும், தலித் மக்களுக்கு நிலங்களை ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று பொதுநிலையினர் கேள்விகளை கேட்கின்றனர்
பஞ்சமி நிலங்களை மீட்டெடுப்பதில் சட்டப் போராட்டங்கள் ஒருவழியாக இப்படி நடந்து கொண்டிருக்கையில் ,பஞ்சமி நிலங்களை நீதிமன்ற உத்தரவுபடி எங்களிடம் ஒப்படையுங்கள் என்று பொது தகவல் அலுவலர் மூலமாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வேப்பிலைப்பட்டி கிராமத்தை சார்ந்த அபிநயா கணவர் பெயர் வெங்கடேசன் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளனர்
தங்களுக்கு சேர வேண்டிய பஞ்சமி நிலம் பில்பருத்தி கிராமம் புல எண் 191/ 2 பரப்பு 1.78 .0 ஹெக்டர் நில பட்டா வழங்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் W. P. No-28920 / 2022-ன் வழக்குப்படி வட்டாட்சியர் நிலத்தை மீட்டு மீட்டுத் தருமாறு கேட்டுள்ளனர்
அதற்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியராக சுப்பிரமணி அவர் தெரிவித்துள்ள ஆர்,டி,ஐ தகவல் படி பஞ்சமி நிலங்கள் தங்களுக்கு வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பஞ்சமி நிலம் தற்போது கோவிந்தன் மனைவி சின்னம்மாள், பூஞ்சோலை கவுண்டர் மனைவி அம்மினிஎன்கின்ற பெரியம்மா ஆகியோர் பெயரில் கூட்டு பட்டாவாக தாக்கல் ஆகியுள்ளது, மேற்படி நிலம் ஆதி திராவிட நிபந்த நிலை நிலம் என்பதால் 2012 ஆம் ஆண்டு அரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் அரசு நிபந்தனைக் நிலம் புஞ்சை நிலத்தை தரிசு நிலம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது பின்பு ஆய்வில்
அந்த நிலத்தினை பஞ்சமி நிலம் என்பதால் கூட்டு பட்டாவை ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்
அவர்கள் மேல்முறையீட்டு மனு தற்போது விசாரணையில் உள்ளது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கு எண் REV,APLW / 101 / 2019 இன் படி மேற்படி நபர்கள் உட்பட 123 நபர்கள் மீளாய்வு மனு செய்துள்ளனர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பஞ்சமி நிலங்களை தலித்துக்கு ஒப்படைக்க முடியாது என அதில் வட்டாட்சிய சுப்பிரமணி தெரிவித்துள்ளார்
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 75 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் இருந்து குடியேறியவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் 2 ஏக்கர் 3 ஏக்கர் என பட்டியல் இன மக்களின் பஞ்சமி நிலங்களை சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக வளைத்து போட்டு விவசாயம் செய்து வருகின்றனர்
அவர்களிடம் கேட்டால் எப்படி பஞ்சமி நிலங்களை வாங்கியிருந்தீர்கள் இது சட்டவிரோதம் அல்லவா? என்ற கேள்வியை எழுப்பினால்
நாங்கள் வந்த போது பட்டியல் இன மக்கள் தங்களிடம் நிலங்களை விலை பேசி விற்றதாகவும், தற்போது அதில் நாங்கள் கிணறு வெட்டி ,விவசாயம் செய்து, வீடு கட்டி வாழ்வதாகவும் தற்போது எங்களை வெளியேறச் சொன்னால் எப்படி விட்டுக் கொடுப்பது என கேள்வியை எழுப்புகின்றனர்
ஒரு அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிலங்களை வாங்க வேண்டும், பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும், தெரிந்தும் பஞ்சமி நிலங்களை வாங்குவதும் விற்பதும் சட்ட விரோதம், இப்படி இருக்கையில் எப்படி இவ்வளவு நிலங்களும் அரசு இயந்திரங்கள் மூலமாக பத்திரப்பதிவு நடைபெற்றது? பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டது? இதில் யார் துணையாக இருந்தார்கள் என்பது சொல்லத் தெளிவாக தெரிகிறது
இதுபோன்று தலித் மக்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் என்ற காரணத்தைக் காட்டி சட்டப்படி உள்ள பஞ்சமி நிலங்கள் பட்டியலின மக்களுக்கு போய் சேராமல் இருப்பதில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியல் திராவிட கட்சிகளும், அவற்றிற்கு ஒத்து ஓதும் தலித் அமைப்புகளும் மௌனம் காத்து வருகின்றனர்
பட்டியல் இனமக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்ற உத்தரவை பெற்று பஞ்சமி நிலங்களை மீட்க முடியும் என்றால் எதற்கு திராவிட மாடல் அரசு ,இந்த சமூக நீதிக்கான அரசு என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
சட்டப்படி சேர வேண்டிய பஞ்சமி நிலங்களை பட்டியல் இன மக்களுக்கு சேர விடாமல் தடுப்பது ஆதிக்க சாதியினரும், அரசு அதிகாரிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்
பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, மக்களை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கிறது, கூட்டணிக் கட்சி இடம் போராடி பெற்று தர முடியாதா என்றால் அவர்கள் கூறும் காரணம்
நாங்கள் மட்டும் தான் தலித் மக்களுக்காக போராட வேண்டுமா? மற்ற அரசியல் கட்சிகள் இதற்காக குரல் கொடுக்காதா? என்று திருப்பி கேள்வி எழுப்புகின்றனர்
ஆரம்ப கால அரசியல் பிரவேசத்தின் போது மிக சத்தமாக
பல்லாயிரம் ஆண்டுகளாக உயர் சாதியினரும், அதிகார வர்க்கமும் பட்டியல் இன மக்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து தடுத்து வருகின்றனர், என்பதும் அனைத்து மக்களுக்கும் தெரியும், அப்படி இருக்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இயக்கத்தை ஆரம்பிப்பது, அதிகாரத்திற்கு வருவது, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வந்த பிறகு
பட்டியல் இன மக்களுக்கு நாங்கள் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமா என்று கேள்வி மிகவும் மோசமானது சட்ட மாமேதை அம்பேத்கர் கூறியது போல நான் கற்ற கல்வி இந்த சமூகத்திற்கு பலன் தரவில்லை என்றால் என்ன பிரயோஜனம் என்பது போல தலித் மக்களை வைத்து அதிகாரத்திற்கு வந்தவர்கள் என் சமூகம் மக்களுக்கு பயன் தரவில்லை என்ற போது எனது பதவியையும் பொறுப்பையும் தூக்கி எறிவேன் என கூட்டணி கட்சியின் வருடம் மிக சத்தமாக கூற முடியுமா
Comments
Post a Comment