பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் அதிகம் ஏற்படுவதன் அறிவியல் காரணம் ??


பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் அதிகம் ஏற்படுவதன் அறிவியல் காரணம்

பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும்.


புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தி, வாந்தியை உண்டாக்குகிறது. ஜிடிஎஃப்15 ஹார்மோனால் சில கர்ப்பிணிப் பெண்கள் நாளொன்றுக்கு 50 முறைகூட வாந்தி எடுக்க நேரிடுகிறது.

Comments