பொம்மிடி புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
பாப்பிரெட்டிப்பட்டி. டிச, 25-
தர்மபுரி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
குறிப்பாக பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்
உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் விழா டிசம்பர் 25ல் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும், கிறிஸ்து பிறந்த நாளான இன்று தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, கோவிலூர், செல்லியம்பட்டி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, பி ,பள்ளிப்பட்டி, பொம்மிடி ,கடத்தூர் என மாவட்டம் முழுவதும் கிறிஸ்மஸ் விழா கலை கட்டியது
குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற கிருஸ்மஸ் பெருவிழாவில் பொம்மிடிபுனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், அச்சுவர்ஸ் ஆங்கிலப் பள்ளியின் தாளாளர் ஜேம்ஸ் மில்லர் ஆகியோர் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஆடம்பர திருப்பலியை நிறைவேற்றினர்
இந்த கிறிஸ்மஸ் விழாவில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறுவர், பெரியவர் முதல் திருப்பதியில் பயபக்தியுடன் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள், கை கொடுத்து தெரிவித்துக் கொண்டனர்
இதே போல புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் கிறிஸ்மஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
Comments
Post a Comment