தர்மபுரி இலக்கியம்பட்டி உள்ள பெருமாள் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் நேற்று மார்கழி 1 முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் நடந்தது இதை அடுத்து அலங்காரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழுங்க ஐயப்பன் திருவீதி உலா சாலை மாரியம்மன் கோவிலில், துவங்கி பைபாஸ் சாலை, இலக்கியம்பட்டி , அண்ணா நகர், அழகாபுரி, ஆகிய வழியாக வந்தது. வழி முழுவதும் பக்தர்கள்பூஜை செய்தனர். இரவு ஏழு மணி அளவில் ஐயப்பனுக்கு சிறப்பு பஜனை நடைபெற்றது. இலக்கம்பட்டி பெருமாள் கோவில் முன்பு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது இதில் இலக்கியம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment