கும்மிடிப்பூண்டி சிப்கார்ட் காவல் நிலையம் விசாரணை நடத்தாமல் அலைய விடும் கோர சம்பவம்..! பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மாவட்ட SP நடவடிக்கை எடுப்பாரா ?
கும்மிடிப்பூண்டி சிப்கார்ட் காவல் நிலையம் விசாரணை நடத்தாமல் அலைய விடும் கோர சம்பவம்..! பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மாவட்ட SP நடவடிக்கை எடுப்பாரா ?
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி சிப்கார்ட் காவல் நிலையம் உட்பட்ட வள்ளிமேடு பகுதியில் வசிக்கும் விவசாயி ஆனந்தன் தகப்பனார் சேகர் இவர்களது 50 சென்ட் நிலத்தில் வெண்டைக்காய்,மல்லிப்பூ பயிர்களை சுமார் 10 வருடமாக விவசாயம் செய்து வருகின்றனர். தங்களது விவசாய நிலையத்திற்கு அருகில் வசிக்கும் பட்டை ரெட்டியார் மகன்கள் கன்னியப்பன், செல்வம் , சேகர், சந்திரன், மற்றும் சந்திரன் ஆகியோர்கள் ஆனந்தன் தோட்டத்தில் உள்ள வெண்டைக்காய், மல்லிப்பூ பயிர்களை பொறாமையின் காரணமாக இரவோடு இரவாக தங்களது மாடுகளை வைத்து பயிர்களை மேய்ச்சளுக்கு விட்டு சேதப்படுத்தியுள்ளனர். இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த ஆனந்தன் பட்டை ரெட்டியார் மகன்கள் கன்னியப்பன், செல்வம் , சேகர், சந்திரன் மகன்களை கேட்டுள்ளார், இதற்கு சரியான பதிலை கூறாததை அடுத்து ஆனந்தன் வீட்டிற்குள் சென்று தன்னுடைய மனைவியிடம் காவல் நிலையத்திற்கு செல்லலாம் என்று அழைத்துள்ளார் அப்போது கோபமடைந்த நான்கு பேரும் சேர்ந்து வீட்டிற்குள் இருந்த ஆனந்தனை தர தரவென இழுத்து சென்று மறைவான இடத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். வீட்டிற்குள் இருந்த மனைவி குமுதா பயந்து கொண்டு வீட்டின் கதவை உள் பக்கமாக சாத்திக்கொண்டு தனது செல்போனில் நடந்த காட்சிகளை படம் பிடித்துள்ளார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்கார்ட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் சிப்கார்ட் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் பாஸ்கர் அவர்கள் " எதிர்மனு தாரர்களை அழைத்து எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் பாதிக்கப்பட்ட ஆனந்தன் மற்றும் குமுதா அவர்களை மூன்று நாட்களாக அலைக்கழிப்பதாக கண்ணீர் விட்டு நியாயத்திற்காக கெஞ்சும் ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரையில் சிப்கார்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்ட்டர் பாதிக்கப்பட்டவர்களை என்ன என்று கூட விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்ட்டர்கள் ஒவ்வொரு நாளில் காவல் நிலையத்திற்கு என்னென்ன மனுக்கள் வந்தது என்று அடிக்கடி ஆய்வு செய்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக விசாரணை செய்ய ஒரு வாய்ப்பிருக்கும் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும் என்பதே சமூகத்தின் குரலாக உள்ளது .
சமூகத்தில் காவல் துறை நல்லதா செய்தாலும் தீமையை செய்தாலும் என்ற விமர்சனம் எழுந்தாலும் மக்களை படைத்த இறைவனுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் காவல் தெய்வமாக இருப்பது காவல் துறைதான், ஆனால் அவர்களை நம்பி போகும் மக்களுக்கு ஒரு சில காவலர்கள் சரியான விசாரணை நடத்தாமல் எனகென்னனும் இருப்பதால் பலபேர் காவல் துறை மீது பல விமர்சனங்களை வைக்கின்றனர். இந்த சூழலை காவல் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இது போன்ற நிலைகளை மாற்ற தமிழக அரசு கண்காணித்து பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியை பெற்று தரவேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது
Comments
Post a Comment