சேலத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி திமுக சார்பில் மாநில இரண்டாம் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து வருகை தந்த முன்னாள் அமைச்சர் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் மகனான தருமபுரியின் இளைஞரணி தளபதி என்று பாராட்டுதலுக்குரிய எழில் மறவனுக்கு அரூரில் உள்ள திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். இந்நிக்ச்சியில் முல்லை ரவி, சௌந்தரராஜன், வேடம்மாள், மற்றும் முன்னணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment