தர்மபுரியில் மாணவியர் விடுதியின் அவலம் காலை கடனை கழிக்க காட்டுப் பகுதிக்கு செல்லும் மாணவிகள் குடிக்க, குளிக்க தண்ணி இல்லகாலை கடனை கழிக்க கழிப்பிடம் இல்லை
காலை கடனை கழிக்க காட்டுப் பகுதிக்கு செல்லும் மாணவிகள்
குடிக்க, குளிக்க தண்ணி இல்ல
காலை கடனை கழிக்க கழிப்பிடம் இல்லை
கதறும் பள்ளி மாணவிகள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டியில் அரசு சார்பில் ஆதிதிராவிட மாணவியர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது
இதில் அருகில் உள்ள இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி மேலும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளிலிருந்து பட்டியல் இன மாணவியர்கள் 56 பேர் இந்த தங்கும் விடுதியில் தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு படிப்பதற்காக சென்று வருகின்றனர்
இவர்கள் அடிப்படையில் மிகவும் வறுமை நிலையில் வாழும் ஏழை மாணவிகள்
இந்த தங்கும் விடுதியில் மாணவிகள் கழிப்பிட வசதிகள் கூட சரியாக செய்து தராததால் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதிகள் முட்புதர்கள், ஓடைகள் போன்ற பகுதிகளுக்கு மிகவும் அச்சத்துடனும், பாதுகாப்பு இல்லாத நிலையிலும் சென்று வரக்கூடிய துர்பாக்கிய நிலையில் தினமும் இருந்து வருகின்றனர்
அதேபோல குடிநீர் வசதி, குளிப்பதற்கும் அருகில் உள்ள விவசாய கிணற்று பகுதிகளுக்குச் சென்று பக்கெட் மூலமாக தண்ணீர்எடுத்து கொண்டு நெடுஞ்சாலையை கடந்து விடுதியில் குளிக்கும் பரிதாப நிலையில் இருந்து வருகின்றனர்
இதனால் இப்பகுதி மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதால் திடீரென்று வெள்ளிக்கிழமை காலை தங்கும் விடுதி முன்பு உள்ள தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
தகவல் அறிந்து விடுதி காப்பாளர் சித்ரா, பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா ஆகியோர் மாணவிகளிடம் போராட்டத்தை கைவிடும் படியும் உங்களது அடிப்படைத் தேவைகள் உடனடியாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று செய்து தருவதாகவும் உறுதியளித்தனர்
மாணவிகளின் பரிதாப நிலை அறிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் பெண் பிள்ளைகளுக்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று அதிகாரிகளை கேள்வி கேட்கத் தொடங்கினர்
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று தர்ணா போராட்டத்தில் இறங்கி போராடியது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்
பெண் பிள்ளைகள் அடிப்படை வசதிகள் கூட இல்லை ,கழிப்பிட வசதி இல்லை, குளிப்பதற்கு வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டது அரசிற்கு வெட்கக்கேடான விஷயம்
உடனடியாக போர்க்கால அடிப்படையில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு கருதி, அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments
Post a Comment