ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி !!!

ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 
              மாபெரும் அறிவியல் கண்காட்சி !!!
     பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் சார்ந்த எண்ணற்ற படைப்புகள் இதில் இடம்பெற்றிருந்தன. ராக்கெட் ஏவுதல், வானிலை அறியும் விண்கலம் ஏவுதல் மற்றும் கோளரங்கம் வியக்கத்தக்கவண்ணம் இருந்தது.
மேலும் அறிவியல் மட்டுமல்லாமல் தமிழ், ஆங்கில, கணிதம் என அனைத்து துறைகளுக்கான எண்ணற்ற செய்திகள் அறியும் வண்ணம் இருந்தது சிறப்பு.  
5000 - திற்கும் மேற்பட்ட நாணயங்கள், 150 - திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் என இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. வியத்தகு இக்காட்சியை தருமபுரி மாவட்டத்தின் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர்  திரு. M . ரேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஸ்டான்லி கல்விநிறுவங்களின் சேர்மன் திரு. V. முருகேசன் அவர்கள்  தலைமையேற்று   துவக்கி வைத்தார்.  செயலாளர் திரு. M.  பிரு ஆனந்த் பிரகாஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பாப்பிரெட்டிப்பட்டி சரகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்க இப்பள்ளியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வியத்தகு இந்நிகழ்ச்சிகளை கண்களித்தனர்.

Comments