தருமபுரி மாவட்டத்தில் ஜூடோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிகுலோசன் பள்ளியில் இருந்து மாணவர்கள் தருமபுரி மாவட்ட அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு. இதில் ஆண்களுக்கான U - 14 பிரிவில் எடை பிரிவு அடிப்படையில் பரணீதரன் மற்றும் பிரசன்னா முதலிடமும், அபிஷாந்த் இரண்டாமிடமும், அன்பரசன் மூன்றாமிடமும், U-17 பிரிவில் செல்வேந்திரன், கிஷோர், அகரன் மற்றும் கவின் முதலிடமும், மகேந்திரன் மற்றும் சார்லஸ் இரண்டாமிடமும், தீபன் மூன்றாமிடமும், U-19 பிரிவில் தினேஷ், ராஜப்ரியன், அஸ்வின், ஜீவானந்தம் முதலிடமும், கோகுல், சிற்றப்பிரியன் இரண்டாமிடமும், வேலவன் மற்றும் ஸ்ரீதர் மூன்றாமிடமும் பிடித்து வெற்றி பெற்றனர். பெண்களுக்கான U - 14 பிரிவில் எடை பிரிவு அடிப்படையில் பிரித்திகா, சுபாஷினி, மோனிகா, ஷபானா, மதுமிதா முதலிடமும், வேதவர்ஷினி இரண்டாமிடமும், U-17 பிரிவில் சுதர்சனஜயம் மற்றும் நிதிஸ்ரீ முதலிடமும், U-19 பிரிவில் கௌதம்ப்ரியா, மோனிஷா, சுமிதா, கீர்த்திகா, கோகுலரசி, ஸ்வாதி மற்றும் மதுமிதா முதலிடமும் பிடித்து வெற்றிபெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் R. சத்யராஜ், M. ஆனந்தகுமார் மற்றும் சிலம்பரசு ஆகியோரை பள்ளியின் தாளாளர் திரு. V. முருகேசன் அவர்கள், செயலாளர் திரு.M. பிருஆனந்த்பிரகாஷ் அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவ மாணவிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Comments
Post a Comment