RTI என்ற போர்வையில் தேனி அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்...

RTI என்ற போர்வையில் தேனி அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்...


தமிழகத்தின் சொர்கமான பூமிகளில் இடம்பெற்ற ஊர் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி பல மக்கள் தங்கள் வாழ்வியலை தொடங்கி வருகின்றனர். ஒரு பக்கம் குடும்ப கஷ்டங்களை உணர்ந்து பல இளைஞர்கள் படித்து அரசு வேலைக்கு சென்று தற்போது நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை ஆரம்பித்து வருகின்றனர். அதில் உள்ள அரசு ஊழியர்கள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், தாசில்தார் என பல ஊழியர்கள் இருந்து வருகின்றனர். இவர்களை மறைமுகமாக சொந்த உறவு காரர்களின் உதவியோடு மந்தையில படுத்து உறங்கி கிடக்கும் சில மோசடி கும்பல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக இந்த ஆசிரியர் எப்படி நிலம் வாங்கினார் அவருக்கு எவ்வளவு சம்பளம் வருகிறது, அவரின் பெயரில் நிலம் உள்ளதா..?  இல்லை அவருடைய கணவர் அவருடைய தந்தை பேரில் என்ன நிலம் இருக்கிறது, அப்படி இருக்குமாயின் அதை எப்படி வாங்கினார்கள் என பல கேள்விகளை எழுப்பி, சம்பந்த பட்ட அதிகாரிகளை சில கும்பல் பணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள் என தேனி அரசு ஊழியர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து தேனி மாவட்ட உளவுத்துறை ஆய்வு செய்தால் பல அட்ராசிட்டி மோசடி கும்பலை எளிதாக பிடிக்க முடியும் என்பதே தேனி மாவட்ட அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments