பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து..சேலத்தில் இருந்து வரும் லாரி, பேருந்து ஓட்டுநர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறை அறிவுரை..!!!
பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து..சேலத்தில் இருந்து வரும் லாரி, பேருந்து ஓட்டுநர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறை அறிவுரை..!!!
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏங்கி வரும் தனியார் பள்ளியில் பேருந்து குப்பனூர் பகுதியில் இருந்து வந்த பள்ளி பேருந்து கோம்பூர், பகுதியில் மாணவர்களை ஏற்றிகொண்டு காலை 8:30 மணி அளவில் வந்தபோது . அப்போது சேலத்தில் இருந்து மரப்பலகை ஏற்றி வந்த லாரி அண்ணாமலை நூல் மில் அருகே பள்ளி பேருந்தின் பின்புறம் மோதியது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கு ஏற்பட்ட சிறிது போக்குவரத்து நெரிசலை பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறை சீர் செய்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மற்றும் வாகன விபத்தில் பாள்ளி மாணவர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த ஒரு உயிர் சேதமும் நடைபெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறை அதிகாரிகள் கூறுகையில் காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை பள்ளி வாகனம் செல்லக்கூடிய நேரம் இதனை ஒவ்வொரு வாகன ஓட்டுனர்களும் உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும் அதுமட்டுமின்றி பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் பின்புறத்தில் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு , பின்புறத்தில் வேறு ஏதாவது வாகனம் வருகிறதா என கண்ணாடியில் பார்த்து வாகனத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்
Comments
Post a Comment