கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் பட்டாசு வெடி விபத்துக்கள்பொதுமக்கள் அச்சம்மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா? தமிழக முதல்வர் உஷார்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் பட்டாசு வெடி விபத்துக்கள்
பொதுமக்கள் அச்சம்
மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா? தமிழக முதல்வர் உஷார்..!!! 


 கிருஷ்ணகிரி மாவட்ட  கர்நாடகா எல்லை பகுதி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் நடந்த வெடி விபத்துகளில் 23 உயிர்கள் இதுவரை பலியாகி உள்ளனர்

மேலும் இந்த வெடி விபத்துக்கள் தொடருமா? என பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது


 இன்னும் சில வாரங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் வெடி பொருட்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு, மாறாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமீறல்களில் ஈடுபட்டு, பட்டாசு விற்பனையாளர்கள், ஒட்டுமொத்தமாகவும், சில்லறையாகவும் பாதுகாப்பற்ற முறையில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருப்பதும்
 அவைகள் பொதுமக்களின் அலட்சியப் போக்கால், பதுக்கள் காரர்களின் பணத்தாசையினாலும்  இதுவரை 23 உயிர்கள் பலியாகி உள்ளனர்


 இந்த உயிர்கள்  இழப்பதற்கு முக்கிய காரணமே மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கும், கையலாக தனமே என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்


 கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி கிருஷ்ணகிரி பகுதியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் 9 உயிர்களும், ஆகஸ்ட் மாதம் 8ம்தேதி தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற வெடி விபத்தில் 1 உயிரிழப்பும்,  நேற்று சனிக்கிழமை ஓசூர் அருகே அத்திப்பள்ளி கர்நாடகா எல்லையில் நடைபெற்ற வெடி விபத்தில் இதுவரை 13 உயிர்கள் என மூன்று மாதத்தில் 30 உயிர்களை இழந்து இருக்கிறோம்


 எனவே இந்த வெடி விபத்து அனைத்திற்கும் காரணம் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
மக்களை காக்க கூடிய தமிழகத்தின் முதல்வர் மு .க ஸ்டாலின் அவர்கள் வழக்கமாக செயல்பாடுகள் போல் இரங்கள் அறிக்தை , நிதியுதவி,  வெளியிட்டும்

 இதற்கு மேல் தமிழக முழுவதும் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை விடுவது, மாவட்ட ஆட்சியர்கள்களும் அவரது வழியில் தொடர்வது போல இதற்கு மேல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என பெயரளவிற்கு வார்த்தைகளை பயன்படுத்தாமல்


 செயல் அளவிற்கு இறங்கி மக்களின் உயிரைப் பாதுகாக்கும் உன்னதமான பணி, பாதுகாப்பு, நடவடிக்கையும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இறந்து போனது நமது தேசத்தின் இளம் தலைமுறைகள் தான்

Comments