பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளை அச்சுறுத்திய கிழங்கு அரவை ஆலை..!! களத்தில் நேரடியாக இறங்கிய மாவட்ட ஆட்சியர் சாந்தி

பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளை அச்சுறுத்திய கிழங்கு அரவை ஆலை 
 களத்தில் நேரடியாக இறங்கிய மாவட்ட ஆட்சியர் சாந்தி


 தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழகத்திலேயே பெரிய அளவிலான வரலட்சுமி கிழங்கு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது

 இந்த ஆலையை ஒட்டி சேர்வராயன் மலையில் இருந்து வரும் பினி ஆறு செல்லுகிறது

 இந்த ஆற்றில் ஆண்டு முழுவதும் கிழங்கு அரவை ஆலையிலிருந்து கழிவு நீர்களை சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்து விடுவதாகவும், இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பால் பட்டு விவசாயத்தை கெடுப்பதோடு, குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டு வருவதாகவும், நீண்ட நாட்களாக விவசாய சங்கங்கள், விவசாயிகள் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்


 மாவட்ட ஆட்சியர் , தமிழக அரசு , மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற இடங்களுக்கு புகார்களாக பலமுறை தெரிவித்துள்ளனர்


 இந்த ஆலையை கண்டித்து விவசாயிகள் சங்கம் போராட்டத்தையும் நடத்தியது

 இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் ஆலையில் மின்சாரத்தை துண்டித்தும், ஆலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு சரியான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 


இறுதியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று 13/ 10 /2023 வெள்ளிக்கிழமை துறை சார்ந்த அதிகாரிகளோடு ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்

 அப்போது ஆலையின் உட்பகுதியில் அடர்த்தியாக தோப்பு போல் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும்.  கழிவு நீர் தொட்டியில் இருந்து ஆற்றிற்குச் செல்லும் துளையிடப்பட்ட துவாரங்களை பைப் லைன்களையும் ஆய்வு மேற்கொண்டு அவை முழவதும் அடைக்கப்பட்டுள்ளதா? வழிகாட்டும் நெறிமுறைகள்? தொழிலாளர்கள் பாதுகாப்பு? விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு மேற்கொண்டதாக மாவட்ட ஆட்சியர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார்


 இந்த ஆய்வின் போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார்மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர் 

மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர்  ஆய்வால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Comments