அதிகாரப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் பற்றிய தீ..! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தோடு இறங்கிய தீ அணைப்பு துறை
அதிகாரப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் பற்றிய தீ..! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தோடு இறங்கிய தீ அணைப்பு துறை
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ ஏற்படும்போது, வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர், தீபாவளி அன்று ஏற்படும் தீ விபத்துக்களில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர். தீயணைப்புதுறை நிலைய அலுவலர் ரமேஷ்குமார் அவர்கள் மாணவர்களிடையே கூறியதாவது இரண்டாம் உலகப் போரின் பின்னர் இந்தியாவில் அதிகமாக தீயணைப்பு நிலையங்களை கொண்டு வரப்பட்டது. தற்போது தமிழகத்தில் 360 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. அதில் 7000 பேர் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினார் அதில் மதத்தினை பற்றியோ தனிப்பட்ட நபரின் செயல்களைப் பற்றியோ தகவல் கேட்காமல் அரசு மூலம் உங்களுக்கும் இந்த சமூகத்திற்கும் என்ன தேவை, அல்லது அரசு அதிகாரிகள் பணிகள் நடத்தாமல் கிடைப்பில் போட்டால் அது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கலாம் என்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு விளக்கம் அளித்து சிறந்த மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சான்றிதழை தீயணைப்புத்துறை வீரர்கள் வழங்கினார்கள். தற்போது இந்த சிறப்பான நிகழ்ச்சி அதிகாரப்பட்டி சுற்றுவட்டாரங்களில் தீயாக பரவி வருகிறது.
Comments
Post a Comment