தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி, (21) என்பவர் ஐடிஐ படித்து வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் உடனடியாக அரூரில் உள்ள சுபம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து 3 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.09-10-2023 இரவு திடீரென இறந்து விட்டார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததன் காரணத்தாலே இளைஞர் மரணமடைந்ததாகவும், தனியார் சுபம் மருத்துவமனை நடத்திவரும் முரளிராஜன், என்பவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதை விட அவரது சொந்த மருத்துவமனையான மருத்துவமனையில் தான் அதிக நேரம் மருத்துவம் பார்த்து வருவதாகவும் இரண்டு இடங்களில் மருத்துவம் பார்ப்பதால் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாததால் இது போன்ற மரணங்கள் நீடிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டு வருகின்றனர்.
தவறான சிகிச்சை அளித்து மருத்துவர் முரளிராஜன் சொந்தமான மருத்துவமனையை சீல் வைக்க வேண்டும் என்றும், அவரை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அரூர் அரசு மருத்துவமனை முன்பு நான்கு வழிச்சாலையில் 150-ம் மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததால் இறந்தவரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆக்ரோசமாக இருந்தனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு, பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார் என செய்திகள் வந்தது ஆனால் அது பொய்யான தகவல் என இறுதியில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது
இப்படி ஒரு செய்திகள் வந்ததை கண்டு அரூர் காவல் துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இறுதிகட்டமாக இறந்த மாணவரின் உடல் கூறாய்விற்கு பிறகே முழுமையான தகவல் கிடைக்கும் மற்றும் இந்த மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
Comments
Post a Comment