பாலக்கோடு கம்மாளர் தெருவில் உள்ள ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் புரட்டாசி 4 சனிக்கிழமையை முன்னிட்டு வராகமூர்த்தி அவதாரத்தில் காட்சியளித்தார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கம்மாளர் தெருவில்  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு  ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு,  பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு   பூஜை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

  ஸ்ரீ கரி வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதம் வராகமூர்த்தி அவதாரத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.


நூற்று கணக்கான பக்தர்கள் புரட்டாசி 4ம் சனிகிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வந்தனர்.

பக்தர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது

Comments