ஒன்றிய பாசிச பாஜக அரசின் மனுதர்ம யோஜனா எனும் விஸ்வகர்மா, குரு சிஷ்யா, குலக்கல்வி சதித்திட்டத்தை எதிர்த்து அரூரில் அதிரடியாக பேச்சால் சிதறவிட்ட பழனியப்பன்

 


மோடி அரசே!

ஒன்றிய பாசிச பாஜக அரசின் மனுதர்ம யோஜனா எனும் விஸ்வகர்மா, குரு சிஷ்யா, குலக்கல்வி சதித்திட்டத்தை எதிர்த்து 28.10.2023 தர்மபுரி மேற்கு மாவட்டம் அரூரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் திராவிட கழக தலைவர் ஆசிரியர் அவருகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, "குலக்கல்வி, குலப்பணி, கட்டாயச் சட்டத்தை கொண்டு வந்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வேலைக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஒழிக்க பார்க்கும் மோடி அரசை கடுமையாக எதிர்ப்போம்!

சனாதனம், பாரதம் என்பதை முன்னிருத்தி, 9 ஆண்டு கால விலை உயர்வு, வேலையின்மை, வறுமை, லஞ்சம், ஊழல், மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அரசின் தோல்வியை மூடி மறைக்க முயல்கிறது பாசிச பாஜக! "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று அடக்கி வைக்கப்பட்ட பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்தும் ஒரு குறிப்பிட்ட மக்கள் இடுப்பில் மட்டுமே அணிந்த துண்டை பாதம் வரை அணியச்செய்து சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவு கட்டி தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது
#திராவிடம் மாவட்டங்கள் தோறும் பெரியார் சமத்துவபுரங்களை அமைத்துக் கொடுத்தார் #கலைஞர் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் நாம் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க முயல்கிறார்கள் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியாளர்கள் மாற்றம் சும்மா வந்ததல்ல பன்னெடுங்காலமாய் போராடிப் போராடி ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து வந்தது! இருப்பதை பாதுகாத்துக் கொண்டே முழுமையான மாற்றத்திற்கு போராடுவோம்! ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக பொய் சொல்லி, பின்னர் பக்கோடா விற்கச் சொன்னதையும் ரூ.400 கொடுத்து வாங்கிய சமையல் கேஸ் சிலிண்டர் விலையை, ரூ.1200 ஆக உயர்த்தி கொள்ளையடிப்தை, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும், ஒன்றிய பாசிச பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிவிடலாம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழக வெற்றிக்காக உழைத்திடுவோம் அரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழனியப்பன் பேசினார் 

Comments