சந்து கடைக்கு பாட்டில் சப்ளை செய்த அரசு மதுபானக்கடை சேல்ஸ்மேன் கைது 250 பாட்டில்கள் பறிமுதல்

சந்து கடைக்கு  பாட்டில் சப்ளை செய்த அரசு மதுபானக்கடை சேல்ஸ்மேன் கைது 250 பாட்டில்கள் பறிமுதல்


பாப்பிரெட்டிப்பட்டி, அக்.12--


 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது வெங்கடசமுத்திரம் பகுதியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த  மாருதி ஆல்டோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் வெங்கடசமுத்திரம் நான்குரோடு பகுதியில் உள்ள அரசு  டாஸ்மாக் கடையில்  விற்பனையாளராக பணியாற்றி வரும் ‌ஜம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த  சக்திவேல் ,45  என்பவர் , டாஸ்மாக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ,250 மது பாட்டில்களை ஏற்றி கொண்டு சந்து கடையில் விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை சென்றது தெரியவந்தது. இதனையடுத்து  இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சக்திவேலை
 கைது செய்தனர். அவரிடம் இருந்து ,250 மது பாட்டில்கள் ,கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Comments