1000 ரூபாய் பணத்திற்காக வரம்பு மீறும் அ பள்ளிபட்டி மின்சார ஊழியர்கள்..!! மாவட்ட மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கமா ??? இல்ல மின்சாரத்துறை அமைச்சர் வரணுமா ???

1000 ரூபாய் பணத்திற்காக வரம்பு மீறும் அ பள்ளிபட்டி மின்சார ஊழியர்கள்..!! மாவட்ட மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கமா ??? இல்ல மின்சாரத்துறை அமைச்சர் வரணுமா ???

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு  பொது இடங்களில் சாதிக்கொரு கோவில் குடும்பத்திற்கு கோவில் என பொது இடங்களை ஆக்கரமிப்பு  செய்து கோவில்கள் கட்டிவிடுகின்றனர். காலப்போக்கில்  அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவும்,  சாலை அமைக்கவும் பெருமளவில் பொது இடங்களில் கட்டப்படும் கோவில்களால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவதில்லை. பொது இடங்களில் கோவில்கள் கட்டி வழி பாடு செய்யும் போது சாலை தேவைக்காக பாதைகளை அகலப்படுத்தும் போது கோவில்களை இடிக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கும் இறைவன் நம்பிக்கை இருப்பதால், மக்களின் நம்பிக்கை மீது நம்பிக்கை இருப்பதால் மக்களால் உருவாக்கப்பட்ட கோவில்களை இடிக்க முன்வருவதில்லை என்பதை உணர்ந்து ஒரு சில நபர்கள் சொத்துக்களை சுரண்டும் நபர்கள் கோவில்கள் என்ற பெயரில் பல அரசு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து திட்டம் போட்டு  கோவில்  கட்டிவிடுகின்றனர்.
 இப்படி திட்டம் போட்டு கோவில் கட்டும் நபர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக ஒரு அமைப்பை சார்ந்தோ சேர்ந்தோ மறைமுகமாக செயலாற்றி இருப்பதால் அவர்களுக்கு சாதி அமைப்பு மற்றும் மத அமைப்பு கட்சிகள்  ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் எதிர்கால வளர்ச்சிக்கு அரசுகள் போராடும் போது அங்கே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணராமல் பல நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி முறையற்ற வகையில் பல இடங்களில் வழிபாட்டு தளங்களை கட்டுபவர்களுக்கு அரசு விதிகளை மீறி வழிபாட்டு தளங்களுக்கு பஞ்சாயத்து மூலமாக தண்ணீர் வழங்குவது போர் அமைப்பது அல்லது போடப்பட்ட ஆழ்துளை கிணறு மூலமாக நீர் குழாய் இணைப்புகள் அமைப்பது இதுமட்டுமின்றி சட்ட விரோதமாக மின் இணைப்புகள் செய்வது போன்ற நிலைகள் உருவாகிவருகிறது. மின் இணைப்புகளை வைத்து மாதம் கட்டப்படும் மின் கட்டண ரசீதை வைத்து பல சலுகளை வாங்க ஒரு சில மக்கள் அமைப்புகள் கோவில்களின் மூலம் ஊழலை தொடங்கியுள்ளது. ஒரு வீடு கட்டி மின் இணைப்பை பெறுவதற்கு பாப்பிரெட்டிப்பட்டி, அ. பள்ளிப்பட்டி மக்கள் பெருமளவில் பாதிக்கபட்ட வருகிறார்கள். ஆனால் பொறம்போக்கு இடத்தில் கோவில் கட்டினால் மட்டும் அவர்களுக்கு எப்படி மின் இணைப்பு உடனடியாக வருகிறது என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக அ. பள்ளிபட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பல இடங்களில் இருக்கும் ஆற்றங்கரை ஓரம், சாலை ஓரம், ஊராட்சியின் அலுவலக இடங்களின் அமைக்கப்பட்ட கோவில்களுக்கு சட்ட விரோதமாக மின் இணைப்புகள் அமைப்பதில் அ. பள்ளிப்பட்டி மின் வாரிய ஊழியர்கள் செயல்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சாமானியர்கள் கட்டும் வீட்டிற்கு அரசு கட்டிடத்திற்கு இன்று வரையில் மின் இணைப்பு கொடுப்பதில் பல விதிமுறைகளை அதிகாரிகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதையெல்லாம் மீறி பாப்பிரெட்டிப்பட்டி, அ. பள்ளிப்பட்டி சுற்று வட்டார மின் வாரிய ஊழியர்கள் பொறம்போக்கு இடத்தில் உள்ள கோவில்களுக்கு மின் இணைப்பை கொடுக்கிறார்கள் என்றால் அங்கே 1000 ஆயிரம் முதல் 5000 ஆயிரம் வரை  லஞ்சம் கை மாறி விளையாடுகிறது என்று கோவில்களில் உள்ள உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் பல பொறம்போக்கு  இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பை கொடுக்க பல விதிமுறைகளை பேசும் வட்டாட்சியர்கள், மாவட்ட நிர்வாகங்கள்,  மின்வாரிய ஊழியர்கள் இதற்கெல்லாம் ரூல்ஸ் பேசமாட்டாங்களா?? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள்,மலைவாழ் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் தவிக்கும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து முழுமையான ஆய்வு செய்து உடனடியாக எதிர்காலத்தில் நடக்கம்  சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்க இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments