கழிவறை இல்லை... இறக்கர பாத்ரூமும் சுத்தமில்ல... தவிக்கும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஊழியர்களும், பொதுமக்களும்

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் முக்கிய பங்கு வகக்கின்றது. இங்கு அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 30 மேற்பட்ட  அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தினந்தோறும் 500 மேற்பட்ட பொது மக்கள்  வந்து செல்கினறனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் சுற்றிலும் முட்புதர்கள் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன இதனால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் கொசு தொல்லையால் பாதிப்படைகின்றனர். இதுமட்டுமின்றி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் சிறுநீர் கழிக்க கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். மக்கள் தன்னுடைய இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என சுகாதரத்துறை, மற்றும் வட்டாட்சியர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து தன்னுடைய கடமைகளைச்செய்வோம் என்று உறுதி ஏற்பார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் தாங்கள் பணி செய்யும் அலுவலகம் நாரி போய் இருப்பதை மருந்துவிட்டு, அதனை சுத்தம் செய்யாமல் கழிப்பிடம் இல்லை என அருகில் உள்ள கடைகளுக்கும், அலுவலகத்திற்கு  அலுவலகம் நோக்கி வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணராமல் இருக்கின்றனர்.இதனால் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். இது மட்டுமில்லாமல் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு  வரும் பொதுமக்களும் சிறுநீர் கழிக்க  கழிவறை கட்டிடம் இருந்தும் கூட அது சுத்தம் இல்லாததால் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள செடிகளுக்கு அருகில் மறைந்து நின்று சிறுநீர் கழிக்கின்றனர். ஆண்களுக்கு இப்படி ஒரு நிலை இருந்தால் பெண்களுக்கு எந்த மாதிர் நிலை ஏற்படும் என்பதை வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உணர்ந்து அலுவலகத்தில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்து ஆரோக்கியமான அலுவலகமாக பயணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வட்டாட்சியர் அலுவலர் வள்ளி அவர்களிடம் கேட்கும்போது ஓரிரு நாட்களில் கழிவறை கட்டிடத்தை சுத்தம் செய்து மக்களுக்கும் அரசு பணியாளர்களுக்கும் பயன் பெறும் வகையில் செயல்படும் என்று கூறினார்.

Comments