தருமபுரி மாவட்டத்தை இந்தாட்சிகள் கண்டுகொள்ளவில்லை கடத்தூர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ்...!!!
தர்மபுரி மேற்கு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடத்தூரில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளுக்காக வாக்குச்சாவடி செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று வருவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் தேர்தல் பணிகளை துவக்கி விட்டதாகவும் தெரிவித்தார்
காவிரியில் ஆண்டுதோறும் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இதனை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்ப உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதை பற்றி அரசு பேசாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. திமுக அரசுக்கு தருமபுரி மாவட்ட மக்கள் மீது அக்கறையில்லையா? இதனை நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால், 5 இலட்சம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ககன்றனர். இந்த சிப்காட்டில் அதிக நிறுவனங்கள் வரவேண்டும். பெங்களூர், சேலம் அருகில் இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் குளிர்பதன கிடங்கு இல்லை. தக்காளி விலை உயர்ந்தது. தற்போது விலை குறைந்து வருகிறது.தக்காளி குளிர்பதன கிடங்கு இருந்தால், தக்காளி விலை உயர்திருக்காது.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக மறுக்கிறது. காவிரி ஆணையம், நீதிமன்றம் இருக்கு. ஆனாலும் நமக்கு தண்ணீர் வரவில்லை. இன்றைய தேதியில் நமக்கு 60 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். நாம் 30 டிஎம்சி தான் கேட்கிறோம். டெல்டா மாவட்டங்களில் குறுவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. கர்நாடக அரசின் பிடிவாதம் ஏற்றுக் கொள்ளமுடியாது. இதனால் அணைகளின் நிர்வாகத்தை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு சரியான தண்ணீர் கிடைக்கும்.
கர்நாடக முதல்வரை, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும். நமக்கு குடிநீருக்கான தண்ணீர் தேவை இருக்கிறது. அதற்காக முதல்வர் நேரில் சென்று சந்திக்க வேண்டும்.
தமிழ்நாடு நெல்லுக்கு கூடுதல் விலை தர வேண்டும். கடந்த ஆண்டு ரூ.100 கொடுத்துள்ளார்கள். ஆனாலும் இந்த ஆண்டு வெறும் 7 ரூபாய் கொடுத்துள்ளார்கள். இதை தமிழ்நாடு அரசு செய்வதுபோல் தெரியவில்லை.
மேட்டூர் அணை தான் மிகப்பெரிய அணை. இதனை ஆழப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆழப்படுத்தினால், கூடுதலாக 20 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் வருங்காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசு எங்கேயாவது கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டும்.
தொப்பூர் சாலையில் அதிக அளவில் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர், மத்திய அமைச்சரை சந்திக்க வேண்டும்.
ஜி 20 மாநாடு இந்தியாவில் வெற்றி பெற்றதற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பாரதப் பிரதமருக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு பதிலாக பழைய முறைப்படி சட்டமன்றத் தேர்தல் தனியாகவும் நாடாளுமன்ற தேர்தல் தனியாகவும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தனித்தனியாக நடத்தப்பட வேண்டும் ஏனெனில் அனைத்திற்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடத்தினால் போதுமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை எனவும் தனித்தனியாக தேர்தல் நடத்துவது நல்லது என அவர் கருத்து தெரிவித்தார்
தமிழகத்தில் சுமார் 67 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை எனவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்
பாமக தேர்தல் கூட்டணி குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர் தேர்தல் வரும் சமயத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என பாமக அறிவிக்கும் என தெரிவித்தார்.
பேட்டியின் போது பாமக மாவட்ட செயலாளர் அவர்கள் எஸ் பி வெங்கடேஸ்வரன் அரசாங்கம் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment