தொண்டர்கள் கொண்டாட்டம்
தலைவர்கள் திண்டாட்டம்
சமீப காலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு வரம்பு மீறியதாகவும், மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருந்தது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இழிவு படுத்துவதையும் அண்ணாமலை தொடர்ந்து செய்து வந்தார்
பொறுத்துக் கொள்ளாமல் தமிழகம் முழுவதும் அஇஅதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தனர்
இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஆ இ அதிமுக தலைமை பாஜக உடனான கூட்டணியை தொடரலாமா? முறித்துக் கொள்ளலாமா? என்று முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது
அஇஅதிமுக & பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்சனை வந்து சேர்ந்துள்ளது
இதை அதிகாரப்பூர்வமாக அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் இறுகிய முகத்துடனும் , தர்ம சங்கடத்துடனும் அறிவித்தனர்
இந்த அறிவிப்பு வெளியானவுடன் அஇஅதிமுக தொண்டர்கள் தமிழக முழுவதும் மகிழ்ச்சி கடலில் திளைத்து கோஷங்கள் எழுப்பியும் . இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்
தமிழகத்தை சார்ந்த பல்வேறு கட்சியினரும் இந்த முடிவை வரவேற்றனர்
வரவேற்பு இப்படி இருக்க
அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் இறுகிய முகத்துடன் எப்படி பாஜகவின் எதிர்ப்பை சமாளிக்க போகிறோம்? எப்போது அமலாக்கப் பிரிவு ரெய்டு நமது வீட்டுக்கு வருமோ? என்ற அச்சத்துடன் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
எது எப்படியோ?
இந்த கூட்டணி முடிவு தமிழ்நாட்டு நலம் சார்ந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
Comments
Post a Comment