காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி ஆற்று பாலம் அருகே சொகுசு காரை மடக்கி 5 கிலோ தங்க நகை கடத்தல் .காரிமங்கலம் போலீசார் விசாரனை .

காரிமங்கலம் அருகே  பூலாப்பட்டி ஆற்று பாலம் அருகே சொகுசு காரை மடக்கி 5 கிலோ தங்க நகை கடத்தல் .
காரிமங்கலம் போலீசார் விசாரனை .

கோவை மாவட்டம் ராஜ வீதியை சேர்ந்த நகை வியபாரி பிரசன்னா (வயது. 40)  இவர் கோயமுத்தூரில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்றிரவு தனது நகை கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு  புதிய நகைகளை பெங்களுரில்  வாங்கிக் கொண்டு நண்பர்களான  விஜயகுமார் (வயது.46) சுரேஷ்குமார் (வயது.45) ஜெய்சன் (வயது . 40 ) ஆகியோர் உடன் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 12 மணி அளவில் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் மீது கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 
2 கார்களில் வந்த மர்ம நபர்கள் பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரில் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்து காருடன் 5 கிலோ நகையை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் இன்று காலை  பிரசன்னா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
தகவலறிந்த மாவட்ட எஸ்பி . ஸ்டீபன் ஜேசுபாதம் காரிமங்கலம் ஸ்டேசனில்  நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

Comments