2000 பேருக்கு வலை வீசும் பழனியப்பனும் தடங்கம் சுப்பிரமணியமும் ஃபுல் டார்கெட்... பாமக அதிமுக..!!!

2000 பேருக்கு வலை வீசும் பழனியப்பனும் தடங்கம் சுப்பிரமணியமும் புள் டார்கெட்... பாமக அதிமுக..!!!
வருகின்ற செப்டம்பர் 26 தேதி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதையொட்டி தருமபுரி முழுவதும் இரவு பகல் பாராமல் திமுக ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என்று போட்டி போட்டு வேலை செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. உதயநிதி வருகை மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற தோரணையில் வரவேற்பு நிகழ்ச்சிகள்  சிறப்பாக நடக்க இரண்டு மாவட்ட செயலாளர்களும் திட்டம் போட்டுள்ளனர் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. காரிமங்கலத்தில் இளைஞர்களிடம் எழுச்சி உரையாற்றும் நிகழ்ச்சி வருகின்ற டிசெம்பர் மாதம் சேலத்தில் நடக்கும் இளைஞர்களின் எழுச்சி மாநாட்டிற்கு ஒத்திகை கண்ணோட்டம் என கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். வரும் 26 ஆம் தேதி உதயநிதி முன்பு சுமார் 2000 ஆயிரம் இளைஞர்களை கட்சியில் இணைக்க வேண்டும் அதுவும் புதிய நபர்களாக இருக்க வேண்டும் மற்ற கட்சியில் போல் பழைய ஆட்களை வைத்து ஃபோட்டோ எடுத்து செய்திக்காக பேசக்கூடாது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் வரலாறுக்காக பேசவேண்டும் என தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்  என்று கூறப்படுகிறது. அந்த 2000 பேர் அதிமுக பாமக வில் உள்ள இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று ரகசியம் கசியவே பாமக தொண்டர்களையும், அதிமுக தொண்டர்களையும் கோழி தன் குஞ்சுகளை எப்படி மறைத்து வைக்குமோ அதுபோல இரு கட்சி மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களை கண்காணித்து வருகிறார்காளாம்...
பார்க்கலாம் தடைகளை மீறி 2000 ஆயிரம் புதிய தொண்டர்களை கழுகு போல் தூக்குவார்களா பழனியப்பனும்  தடங்கமும்...??

Comments