12 ஆயிரம் இளைஞர் கூட்டம் வெற்றி கண்ட காரிமங்கலம் திமுக... வெற்றிவாளை கொடுத்து வரவேற்ற "எழில் மறவன் பழனியப்பன்" தர்மபுரி சுற்றுப்பயணம் வெற்றி மகிழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த அமைச்சர் உதயநிதி
12 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் கூட்டம் வெற்றிவாளை கொடுத்து வரவேற்ற "எழில் மறவன் பழனியப்பன்"
தர்மபுரி சுற்றுப்பயணம் வெற்றி
மகிழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த அமைச்சர் உதயநிதி
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுவை இணைந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை மாவட்டம் தோறும் அமைச்சர் உதயநிதி மேற்கொண்டு வருகிறார்
கொடியேற்றுதல்,கலைஞர் நூலகம் திறந்துவைத்தல் , தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம். கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி பணமுடிப்பு வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காரிமங்கலத்தில் ஒருங்கிணைந்த தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்காக காரிமங்கலம் விழா கோலம் பூண்டிருந்தது,
மேடையில் தொடங்கி சுமார் 22 அடி உயர கொடிக்கம்பங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுக கொடிகள் தோரணமாக கட்டப்பட்டிருந்தது
சுமார் 20,000 ஆயிரம் சிறு கொடி கம்பங்கள், 10 ஆயிாம் பேர் அமரக்கூடிய மிக பிரம்மாண்டமான கூட்ட அரங்கம், தஞ்சை சிவா அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக, பாமக மிகவும் வலிமையான கட்சிகளாக இருப்பதால், அவற்றை சமாளிக்கும் பொருட்டு மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் இணைந்து உதயநிதி ஸ்டாலின் வருகை மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக சுமார் 4 கோடி செலவில் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த பிரமாண்ட கூட்டத்தில் 10 மணிக்கு துவங்கியது இதில் சுமார் 10 ஆயிரம் இளைஞர் படையினர் வெள்ளை பனியன் டி சர்ட் அணிந்து ஒரே சீறுடையில் இருந்தனர்.
முதலில் பேசிய மேற்கு மாவட்ட செயலாளர் பி, பழனியப்பன் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டும், வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமைக்கு வெற்றியை ஒப்படைப்பதாகவும், அதற்கு மாவட்ட இளைஞர் அணியினர் முழுமூச்சுடனும், மிக எழுச்சியுடனும் பணிகளை விரைவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் தடங் கம் சுப்பிரமணி தொண்டர்களுக்கு இதே அறைக் கூவலை விடுத்தார்.
மாவட்டத்தின் பொருப்புஅமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர் செல்வம் பேசுகையில்
நமது எழுச்சிமிகு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேகமாகவும், மிகவும் துல்லியமாகவும், செயல்பாடுகளை தனது செயலில் காட்டி வருகிறார்
ஒரு கல் மூலமாக பாஜக கட்சியை விரட்டி அடித்தார், தற்போது சனாதன கருத்து மூலமாக வட இந்திய சாமியார்களை ஓட ஓட கதற விட்டுள்ளார், எழுச்சிமிகு இளைஞர் அணி தலைவர் நமக்கு கிடைத்துள்ளார், வீரியமாக செயல்பட்டு இளைஞரணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் வென்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
இளைஞர் அணியின் எழுச்சிமிகு ஆரவாரத்திற்கு இடையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ,மாநில அமைச்சர் உதய நிதி தனது உரையை துவங்கினார்
அப்போது அவர்
திமுக கட்சியின் மிகவும் பலம் பொருந்திய அணி இளைஞரணி தான், இளைஞரின் மூலமாகத்தான் கட்சியில் உள்ள அனைவருக்கும் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளனர்
நமது முதல்வர், நமது தலைவர், படிப்படியாக சிறுசிறு பொறுப்புகளில் இருந்து இளைஞர் அணி மூலமாகத்தான் மேயர், துணை முதல்வர், அமைச்சர், தற்போது தமிழக முதல்வர் என உயர்ந்துள்ளார்
எனவே இளைஞர் அணியினர் மிகவும் வீரியத்துடன், செயல்பட்டு கட்சிக்கு வெற்றி பெற்று தர வேண்டும், நமது தலைவர் இளைஞர் அணி மீது மிக நம்பிக்கையை வைத்துள்ளார்
தர்மபுரி மாவட்டம் திமுகவிற்கு பல எடுத்துக்காட்டான மாவட்டம், நிறைய தொடர்புகள் உண்டு, 1989 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை நமது கலைஞர் அவர்கள் இங்கு தான் துவக்கி வைத்தார்
அதேபோல இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் நமது முதல்வர் தர்மபுரியில் தான் துவக்கி வைத்துள்ளார்
கடந்த காலத்தில் இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பாளையம் கோட்டை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார், அப்போது நமது பேரறிஞர் அண்ணா அவர்கள் கலைஞர் அவர்களை சிறையில் சென்று பார்த்தார், அப்போது பேரறிஞர் அவர்கள்
நமது கலைஞர் அண்ணி எப்படி இருக்கின்றார்கள். எனது மனைவி நலமாக உள்ளனரா? பிள்ளைகள் நலமாக உள்ளனரா? என்று கலைஞர் கேட்பார் என்று அண்ணா அவர்கள் எதிர்பார்த்தார்
ஆனால் அதற்கு மாறாக கலைஞர் அவர்கள் தர்மபுரி எப்படி உள்ளது என்று அறிஞர் அண்ணாவிற்கு அதிர்ச்சியை ஊட்டினார்
அப்போது என்னவென்றால் தர்மபுரி மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அதில் எந்தெந்த பொறுப்பாளர்கள் என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்கள்? தேர்தல் பணி நன்றாக செல்கின்றதா? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்று தர்மபுரி மீது மிக அக்கறையோடு நமது கலைஞர் அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டார்
இப்போது இங்கு இருக்கும் இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,
அலட்சியமாக இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோட்டையை விட்டது போல இந்த முறை விட்டு விடக்கூடாது என்று பேசினார்
அதேபோல எதிர்க்கட்சிகளை பற்றி கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி இருக்கிறதா? இல்லையா என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன
அதிமுக அமைச்சர்கள் 2 பேர் திருட்டுத்தனமாக பெங்களூர் டு டெல்லி விமானத்தில் செல்கின்றனர், 2 பேர் கொச்சின் சென்று டெல்லி செல்கின்றனர்
நேரடியாக சென்னையில் இருந்து விமானம் இருக்கும்போது திருட்டுத்தனம் எதற்கு?
அடிமை அதிமுக மதுரையில் நடத்தியது புளிசாதம், தக்காளி சாதம் மாநாடு
அதிமுக தற்போது பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது, அந்த அணிதான் அமித்ஷா அணி, அந்தம்மா இருக்கும்போது மோடியா லேடியா என்று தைரியத்துடன் பேசினார், அவர் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்கள் மோடி தான் எங்கள் தாடி என வெட்கமில்லாமல் கூறி வருகின்றனர்
இவர்கள் இருவரும் தற்போது நடத்துவது நாடகம், இரண்டு பேரும் திருடர்கள், தேர்தலில் இருவரும் சேர்ந்து கொள்வார்கள்
ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்தியா 2020 ஆம் ஆண்டு வல்லரசாக மாறும் என்று கூறினார் , ஆனால் தற்போது 2047 ஆம் ஆண்டு தான் வல்லரசாக மாறும் என்று மக்களை ஏமாற்றுகிறார்,
பிரதமர் விமானி இல்லாமல் கூட விமானத்தில் சென்று விடுவார், அதானி இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார் நமது முதல்வர் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை கொடுத்து விட்டார், மோடிசொன்ன 15 ஆயிரம் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சென்னது என்ன ஆச்சு
இந்தியாவை மோடி அவர்கள் மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னார் அதை மட்டும் தான் செய்து முடித்து உள்ளார்
பிரதமர் மோடி ஒரு குடும்ப ஆட்சி தமிழகத்தில் நடக்குதுன்னு சொல்லிட்டு வராரு, அதுவும் கலைஞர் குடும்ப ஆட்சின்னு சொல்றாரு ஆமா இது ஒரு குடும்ப ஆட்சி தான் தமிழ்நாட்டில இருக்கிற எல்லா குடும்பமும் கலைஞர் குடும்பம் தான், அதற்கான ஆட்சி தான் நடக்குது, கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு அதானி குடும்பத்திற்கு பல நிறுவனங்களை தாரை வார்த்துகிட்டு இருக்கு, இது குறித்து அமெரிக்க நிறுவனம் ஒன்று அதானி குடும்ப வளர்ச்சிக்கு எப்படி இப்படி வளர்ந்துகிட்டே இருக்குன்னு கேள்வி கேக்குறாங்க
மோடி அரசில் பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்திருக்கு, மருத்துவ காப்பீட்டு ஊழல், ஆயுஷ்மான் திட்டத்தில் நடந்திருக்கு, மத்திய தணிக்கை குழு வெளியிட்டு இருக்கு கண்டுபிடிச்சு ,
நம்ம வீட்ட நாம தான் சுத்தமா வச்சிக்கணும், நம்ம வீட்டுக்குள்ள விஷ பாம்பு வந்துச்சு, அடிச்சு விரட்டிட்டோம், மீண்டும் அந்த விசைப்பாம்பு நம்ம வீட்டுக்குள்ள வந்துருச்சு, அது வெரட்டி அழித்து ஒளிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வெளியே இருக்கிற முட்புதர்கள், குப்பையை தூக்கி எறிய வேண்டும்
அப்பதான் விஷ பாம்பு நம்ம வீட்டுக்குள்ள வராது
எனவே நாம் விழிப்புணர்வோடு இருந்து தமிழகத்தை காப்பாத்தினது போல, இந்தியாவையும் நாம காப்பாற்ற வேண்டும், அதற்கு இளைஞர் அணியினர் கடுமையான தங்களது உழைப்பை கொடுக்கணும், அப்பத்தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதியையும் வென்றெடுக்க முடியும், அதனால நீங்க உங்களது உழைப்பை கூடுதல் ஆக்குங்க, வெற்றியே பெற்றுக் கொடுங்கள் இவ்வாறு அமைச்சர் உதயநிதி தனது உரையில் பேசினார்
இந்தக் கூட்டத்தில் நினைவு பரிசாக மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன்,
இளைஞர்களின் வழிகாட்டி எழில் மறவன் ஆகியோர் இணைந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளிவால் பரிசாக வழங்கினர்
Comments
Post a Comment