' மாபெரும் தமிழ் கனவு ' தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ERK கல்லூரியில் 850 மாணவர்களோடு நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான மூன்று இரண்டு 2023 அன்று தொடங்கப்பட்டு 24 4 2023 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் சென்றடையும் வண்ணம் நூறு இடங்களில் சிறப்பாக மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நடத்தப்பட்டது.
இதனை உயர்கல்வி துறையுடன் தமிழ் இணைய கல்விக் கழகம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதன் நூறாவது நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது.
எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்த வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
மாபெரும் தமிழ் கனவு பரப்பரை திட்டம் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் எறும்பியாம்பட்டி அருகில் அமைந்துள்ள இ ஆர் கே தனியார் கல்லூரியில் சுமார் 850 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளிலும் தமிழ் பெருமைகளை பறைசாற்றி மாணவ மாணவிகளிடையே தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சிகள் குறித்தும் பெண்கள் ஏன் அடிமையானார்கள் பெண்கள் எப்படி இருக்கப்பட வேண்டும் தமிழ் எப்போது உருவானது மனிதனுக்குள் எப்படி தமிழ் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகவும் மாணவ மாணவிகளை இருக்கும் வகையிலும் பேராசிரியர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உரையாற்றினால் இந்நிகழ்ச்சியில் அரூர் கோட்டாட்சியர் இரா வில்சன் ராஜசேகர் அவர்களும் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் அவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment