வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை ஓனரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை ஓனரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது..* 
வடவள்ளி,ஆக.19-

கோவை மருதமலை சாலை நவாவூர் அருகே சரஸ்வதி  மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் பாலாஜி (42). கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மளிகைக்கடைக்கு எதிரே உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும்  கோகுல்ராஜ் என்ற இளைஞர் வந்து பிஸ்கட் வாங்கி சென்று உள்ளார். சிறிது நேரத்தில் கோகுல்ராஜ் பெயரை சொல்லி கடைக்கு வந்த நபர் பணத்தை சில்லறை கொடுக்கும் பொழுது தவற விட்டு சென்றதாக கூறி பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். உன்னை எனக்கு தெரியாது நீ சென்று கோகுல்ராஜை வரச்சொல் என்று கூறி அனுப்பி உள்ளார். மேலும் கடையில் தேடி பார்த்த பொழுது கோகுல்ராஜ் தவற விட்ட பணம் 6 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது. அதை அடுத்து அவர் வேலை செய்யும் நிறுவன உரிமையாளருக்கு பணத்தை விட்டு சென்ற கோகுல்ராஜ் பற்றி கூறி பொறுப்புடன் இருக்க சொல்லும்படி கூறியுள்ளார் பாலாஜி. இது குறித்து கோகுல்ராஜ் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் கோகுல்ராஜை அழைத்து கண்டித்து உள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர் தன் நண்பரை அழைத்துக்கொண்டு மளிகைக்கடைக்குள் புகுந்து பாலாஜியை சரமாறியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர். தற்போது மிளிகைக்கடைக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் கடைகாகாரரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Comments