இந்தியாவில் வார்டு உறுப்பினருக்கு கூட பிரதமர் ஆக தகுதி உண்டு என்றால் அது திமுக கட்சி தான்.. டீ க்கடை விமர்சனம் - டோண்ட் கேர் தளபதி நம்பிக்கை...எனது இலக்கு..முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்..!!!


இந்தியாவில் வார்டு உறுப்பினருக்கு கூட பிரதமர் ஆக தகுதி உண்டு என்றால் அது திமுக கட்சி தான்.. டீ க்கடை விமர்சனம் - டோண்ட் கேர் 
தளபதி நம்பிக்கை...
எனது இலக்கு..
முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்..!!!



தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக வட்டாரத்தில் இளைஞருக்கான 
பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையில் ஒருதலை பட்சமாகவும்  சமூகம் சார்ந்தும் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அவர்கள் பொறுப்பாளர்களை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு சாதகமான நபர்களுக்கும் புதிதாக திமுக கட்சியில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்கும் பொறுப்புகள் கொடுத்துள்ளார்.

 தருமபுரியில் ஆளுங்கட்சி திமுக வா இல்லை பழனியப்பனின் திமுக வா என எங்கு பார்த்தாலும் செய்தித்தாள் களிலும்  சமூகவலைதளங்களிலும் அவர் மீது விமர்சனம் வந்த வண்ணமே உள்ளது. இது பற்றி நேரடியாகவே முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதய தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களிடம் கேட்கும் போது இதைவிட விமர்சனம் அதிமுகவில் இருக்கும்போதே கடந்து வந்துவிட்டேன்.


நான் பல்வேறு தடைகளை உடைத்து திமுகவில் இணையும்போதே "அய்யய்யோ" எங்க நம்முளுடைய பொறுப்பை பழனியப்பன் காலி செய்து விடுவாரா விடுவானா என்று கூட பலர்  புலம்ப ஆரம்பித்தனர். அண்ணே நீங்க தடங்கம் அண்ணனை சொல்றீங்களா என்று கேள்விக்கு இப்படி சொல்லி சொல்லி தாங்க ஏதோ இரண்டு பேரையும் பாகிஸ்தான் இந்தியா எதிரும் புதிருமா இருக்கற  மாதிரி பேச வச்சிட்டிங்க. 

எங்களுக்குள்ள எந்த ஏற்றத்தாழ்வு எண்ணமும் இல்ல நாங்க இரண்டு பேரும் அரசியல் ரீதியாக நல்ல பயணம் செஞ்சிட்டு இருக்கோம், அந்த நல்ல விசியமெல்லாம்  யாருக்கும் தெரியாது.  ஒரு பக்கம் பழனியப்பன்  தடங்கம் சுப்பிரமணி அவர்கள் அவருடைய அரசியல் பணிகளும் எங்களுடைய அரசியல் பணிகளும் நன்றாகவே உள்ளது.  


இதனை உணர்ந்த சில பேர் எப்படியாவது பழனியப்பனை காலி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் விமர்சனம் செய்கின்றனர். இது போன்ற நிலையால் எதிர்காலத்தில் திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. காரணம் நானும் திமுகவில் ஒன்றிணைந்த  தொண்டன் என்பதை அவர்கள் நினைக்க வேண்டும்  
இது அவர்களுடைய  சிந்தனை அதை யாராலும் மாற்ற முடியாது.  
இது போன்ற விமர்சனங்கள் கட்சியை அவமதிக்கும் என்பதை அவர்களை  என்னால் உணரவைக்க முடியும்.  

தற்போது புது ரூட்டில்  அதிமுக அமமுக வில்  உள்ள என்னுடைய சமூதாயச்சை சேர்ந்தவர்கள் ஒரு சிலர் 
திமுக கட்சிக்குள் இருக்கும் நபர்களை தூண்டி விட்டு என்னை பழிவாங்குவதாக அவர்களின் மனதில் நஞ்சை விதைத்துள்ளனர். ஆனால் திமுகவின் அடிமட்ட தொண்டனை கூட ஒரு போதும்  ஏமாற்ற முடியாது காரணம்  இப்போது அவர்கள் நன்றாகவே தெரிந்து கொண்டனர் '' பழனியப்பனும் திமுகதான்''  அவரும் (கருப்பு சிவப்புதான் ) அவரை பற்றி தவறாக சித்தரித்தால் திமுகவின் கழகத்திற்குதான் அவபெயர் அதனால் பழனியப்பனுடன் ஒன்று  திரள்வோம் என்று கூடிதான் எந்த ஒரு கூட்டம் நடந்தாலும் திமுக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்கின்றனர். 

டீ கடைகளில் செய்தித்தாள்கள் வருகிறதோ இல்லையோ அதற்கு முன்பு பரபரப்பான செய்தியாக பழனியப்பனின் செயல்பாடு பற்றி தான் பேசி வருவதாக செய்திகள் வலம் வருகிறது இது போன்ற விமர்சனங்களையும் கேளிக்கை கூத்துகளையும் இனிமேல் நமது கழகத் தொண்டர்களை பார்த்துக் கொள்வார்கள் இனி விமர்சனத்தை பற்றி ஒருபோதும் கவலைப்பட போவதில்லை நான் திமுகவில் இணையும்போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களின் முன்னிலையில் மேடையில் நிறுத்தி தளபதி சொன்ன ஒரே வார்த்தை பழனியப்பன் வந்துவிட்டார் இனி தர்மபுரியை பற்றி எனக்கு கவலை இல்லை  இனிமே தர்மபுரி திமுக போட்டியாக மாறும் என்று நம்பிக்கை வைத்தார் தளபதியின் நம்பிக்கையே எனது இலக்கு நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி திமுக கோட்டையாக மாறும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எங்களுடைய திமுக தொண்டர்களுக்குள் நடக்கும் விமர்சனங்கள் அண்ணன் தம்பிக்குள் நடப்பது போல அதனால் மற்றவர்கள் புத்தி சொல்லி அருவி வளர்த்து கற்றுக்கொள்ளும் கட்சி திமுக கிடையாது என்பது எனக்கு ஆரம்பகால கட்டத்திலேயே தெரியும் காரணம் சாதாரண வார்டு உறுப்பினருக்கு கூட பிரதமர் அளவிற்கு பேசக்கூடிய  தகுதிகள் உடையவர்கள் திமுக கட்சியில் உண்டு அந்த கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர் ஆக நான்  எப்படி இருக்க   வேண்டும் என்பதை நான் நன்றாக கற்று கொண்டு வருகிறேன் எதிரிகளாலும் சமூகத்தாலும் அதனால் இனி வரும் காலங்களில் வெற்றி பயணத்தை தொடர்வோம் கழகத் தொண்டர்களோடு....

என்று ஆணித்தரமான நம்பிக்கையை விதைத்தார் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் பொறுத்திருந்து பார்ப்போம் தளபதியின் நம்பிக்கை காப்பாற்றுவாரா …! என்று…??

Comments