திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து திருநங்கையாக மாற்றி பணம் பறித்ததாக திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து திருநங்கையாக மாற்றி பணம் பறித்ததாக திருநங்கை ஒருவர் போலீசில்  புகார் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரைச் சேர்ந்த அலோகம் பவன்குமார் (திருநங்கை ஆன பிறகு பிரமராம்பிகா ) விஜயவாட கிருஷ்ணா லங்காவைச் சேர்ந்த எலி நாகேஸ்வர ராவ் ஆகியோர் கண்ணூரில் உள்ள வி.ஆர்.சித்தார்த்தா கல்லூரியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிஇடி படித்தனர். கல்லூரி காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப தொடங்கினர் பின்னர் அது காதலாக மாறியது.  2019 ஆம் ஆண்டு படிப்பை முடித்த இருவரும் கிருஷ்ணா லங்கா சத்யங்கரி ஹோட்டல் சென்டருக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். வீட்டின் உரிமையாளரிடம் தங்களை இருவரும் ஆண்கள் என அறிமுகம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து  டுஷன் செண்டர் அமைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தனர்.  மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அவர்கள் இருவர் உறவு குறித்து தெரியப்படுத்தாமல் ஆண் நண்பர்களாக அனைவர் மத்தியில் வசித்து வந்தனர்.   சில நாட்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதற்காக  பவன்குமாரை -  நாகேஸ்வரராவ் டெல்லிக்கு அழைத்துச் சென்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாற்றி தனது பெயரை பிரமராம்பிகா  என்று மாற்றி கொண்டார். இந்த   அறுவை சிகிச்சைக்காக பிரமராம்பிகா சுமார் ₹.11 லட்சம் செலவு செய்தார். இந்நிலையில் பிரமராம்பிகா  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அதனை நம்பி நாகேஸ்வர ராவுக்கு 11 சவரன் தங்கம் மற்றும் ₹.26 லட்சம்  கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் இருவருக்கும் இடையே மனஸ்தானம் ஏற்பட்ட நிலையில்  நாகேஸ்வரராவ் திருமணம் செய்ய மறுத்து வீட்டை விட்டு அனுப்பிய நாகேஸ்வர ராவ்
தனது தாய் விஜயலட்சுமியுடன் மங்களகிரிக்கு சென்றார். இதனால் நாகேஸ்வர ராவ் எங்கு சென்றார் என்று தெரியாமல்  
பிரமராம்பிகா
விரக்தியுடன் பெனமலூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.  நேற்று நாகேஸ்வர ராவ மங்களகிரியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நாகேஸ்வரராவ் மீது மங்களகிரி போலீசில் புகார் அளித்தார். ஆனால் இந்த விவகாரம் முழுவதும் கிருஷ்ணா லங்காவில் நடந்ததால், அங்கு புகார் அளிக்க வேண்டும் என மங்களகிரி போலீஸார் பரிந்துரைத்தனர். இதனால்  பிரமராம்பிகா கிருஷ்ணா லங்கா  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  பாதிக்கப்பட்ட பிரமராம்பிகா புகாரின்படி, நாகேஸ்வரராவ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி மீது  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments