அதிமுக விற்கு வேற வேலையில்ல திமுகவின் மீது விமர்சனம் வைப்பதே அவர்களுக்கு பொழப்பு..!!! மத்திய அரசு - அப்படின்னா என்ன??? அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் ஷாக் கான கேள்விகளும் பதில்களும்...

கலைஞரின் 100 நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தருமபுரி மாவட்டம்  முழுவதும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் திமுகவின் மூத்த முன்னோடிகளை சந்தித்திக்க பயணம் மேற்கொண்டிருந்தார். இதில் திமுகவின் மேற்கு மாவட்ட பகுதியான கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்டு ரோடு, கவுண்டம்பட்டி, சுற்று பயணம் மேற்கொண்டு அதன் வழியாக அரூர் பகுதிக்கு சென்றார். அப்போது எச் புதுப்பட்டி, அருகே நடைபெறும் சுங்கச்சாவடி பணிகளை கண்டு திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் அவர்களிடம் இது பற்றி கேட்டுள்ளார்   அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம்" அருகில் இருந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்கள் அண்ணே இத வச்சிதான் போன வாரம் 8-08-2023 ஆம் தேதி இங்கிருக்க மூனு அதிமுக MLA க்களும் அரசியல் பண்ணிட்டு போயிருக்காங்க..அதிமுக ஆட்சியில டோல்கேட்  போட வேண்டாம்னு சொல்லிட்டாங் களாம் அப்டின்னு அங்க இருக்க விவசாயிகள் முன்னாடியும் செய்தியாளர்கள் முன்னாடியும் கே பி அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமியும் பேசிருகாங்க. ஆனால் ஒரு பகுதியில சம்பவம் நடந்த இரண்டு MLA வும் அந்த மாவட்ட செயலாளர் ஒன்று சேர்ந்து அரசியல் பண்றது இங்கதாண்ணே 

இதனால் விவசாய நிலத்தை டோல்கேட் பணிக்காக திமுக ஆக்கரிமிப்பு செஞ்சுடுச்சின்னு. இப்போ அங்க இருக்க விவசாயிகள் நினைச்சிட்டு இருக்காங்கனும் சொன்ன உடன் உடனடியாக செய்தியாளர்களை அரூர் பேரூராட்சி தலைவர் சூரிய தனபால் வீட்டில் சந்தித்தார். அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம்.  அப்போது அவர் பேசுகையில் இந்த சுங்கச்சாவடி அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம், அவர்களுடைய ஆட்சி காலத்திலேயே டெண்டர் விடப்பட்டு விவசாயிகளிடைய நிலங்களை அவர்கள் ஆக்கரிமிப்பு செய்துள்ளார்கள். கிட்டத்தட்ட மூன்றாண்டு வருடங்களாக இந்த பணிகளை நடந்து கொண்டிருக்கிறது.இந்த சுங்கச்சாவடி ஒப்பந்த தாரர் அதிமுக நபர்களுக்கு பின்னணியாகத்தான் இருக்கும். அதிமுக ஆட்சியில் பல 100 க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தமிழகம் பார்த்து கொண்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான தனி பட்ஜட் ஒதுக்கப்பட்டும் கடந்த இரண்டாண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் இல்லாமலேயே அவர்களுக்கான நலத்திட்டங்கள் கிடைத்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் பாராட்ட கூடிய ஆட்சியாகத்தான் திமுக இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் கொண்டு வராததால் அதிமுக பாதிக்கப்படுகிறது. பிறகு செய்தியாளர் மத்திய அரசாங்த்தின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு அப்படின்னா என்ன என்று கேள்வி ஒரு ஷாக் கொடுத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம். பிறகு ஒன்றிய அரசு தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். இப்போது எதிர் கட்சிகாரகளுக்கு வேண்டுமென்றே திமுக வின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற அடிப்படையிலேயே எதிர்கட்சிக்கு வேற எந்த வேலையும் இல்லாததால் திமுகவின் மீது விமர்சனம் வைக்கின்றனர். இந்த டோல்கேட் விசியத்தில் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போலதான் அதிமுக வின் செயல் என்றார்.  

Comments