அரூர் அருகே துக்க நிகழ்ச்சிக்காக சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் காயமடைந்தனர் - மருத்துவர் இல்லாததால் முதலுதவி சிகிச்சையை மக்களே செய்த அவல நிலை.

அரூர் அருகே துக்க நிகழ்ச்சிக்காக சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் காயமடைந்தனர் - மருத்துவர் இல்லாததால் முதலுதவி சிகிச்சையை மக்களே செய்த அவல நிலை.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நெருப்பாண்ட குப்பம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக கடத்தூர் அருகே உள்ள தாஸ் நகரை சேர்ந்தவர்கள் மகேந்திரா டூரிஸ்ட் வேனில் சென்றுள்ளனர். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு சொந்த கிராமத்திற்கு செல்லும்போது மொரப்பூர் அருகே உள்ள சமத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
வாகனத்தில் பயணம் செய்த 27 பேர்  காயமடைந்தனர். தகவலின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்பதால் மருத்துவப் பணியில் இருந்த ஒரு செவிலியர் மட்டுமே முதலுதவி சிகிச்சை மக்களுக்கு அளிக்கப்பட்டார். பின்பு மருத்துவம் மற்றும் ஊசி போடத் தெரிந்த நபர்கள் துப்புரவு பணியாளர்கள் காயம் பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஊசியை செலுத்தும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் காயம் பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Comments