திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் வசித்து வரும் முருகன் மனைவி கற்பகம் என்பவர் இக்கிராமத்தில் ஒரு தனி நபரிடம் வீட்டு மனை நிலத்தை க்ரையம் பெற்று இவரது பெயரில் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதே நிலத்தின் பெயரில் அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தரெட்டி மகன்
மூர்த்தி (திமு க).வை சேர்ந்தவர் சங்கர் என்பவரிடத்தில் இந்நிலத்தை விற்பனை செய்து கணிசமான முன்பணம் பெற்றுவிட்டதால்
கற்பகம் நிலத்தின் உரிமையாளரிடம் பத்திர பதிவு செய்யப்பட்ட நிலத்தில் பாதியை
மூர்த்தி அல்லது சங்கர் பெயருக்கு பத்திர பதிவு செய்து கொடுக்கும் படி பல கோணத்தில் அச்சுருத்தியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த கற்பகத்தை கிராம கட்டப்பஞ்சாயுத்துக்கு
அழைத்த அதே கிராமத்தை சேர்ந்த
பாலுரெட்டி மகன் கேசவன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் காசிரெட்டி மகன்ரவி மற்றும் கோவிந்தரெட்டி மகன் மூர்த்தி ஆகியோர்கள் கட்டபஞ்சாயுத்துக்கு அழைத்தும் கற்பகம் வரவில்லை என்ற எறிச்சலடைந்து உடனடியாக திருவிழா ஏற்பாடுகள் செய்து கற்பகத்தை ஊரை விட்டு ஒதுக்கி திருவிழாவிற்கு அவரிடத்தில் ஊர் வரி வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உலச்சலுக்கு ஆளான
கற்பகம் பொன்னேரி சார் ஆட்சியரிடம் தனது கோரிக்கை மனுவில் என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர் வரி வாங்க மறுத்து ஊர் திருவிழாவில் கலந்துக்கொள்ள கூடாது என என்னை ஒதுக்கிய வர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊர் திருவிழாவில் கலந்துக்கொள்ள சுமுக தீர்வு காணவேண்டும் என
புகார் அளித்துள்ளார்.
இதனை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் ஐஸ்வரியா ராமநாதன் உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்துள்ளார்.
மூர்த்தி என்பவர் இதே போல் பலரது சொத்துக்களை பத்திர பதிவு செய்யாமல் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பத்து ஏக்கருக்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயருக்கு போலி பட்டா மாற்றம் செய்யப்பட்டு பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் திருவள்ளூர் வருவாய் அலுவலகத்தில் விசாரனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment