கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி ஐ ஜி விஜயகுமார் இப்படி ப்பட்டவரா !!! தற்கொலைக்கான காரணம் என்ன??

கோவை சரகம் மாவட்டத்தில் டி ஐ ஜியாக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார். இவர் தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கடலூர் நாகை போன்ற இந்த மாவட்டங்கள் போன்ற பகுதிகளில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர். அதேபோல சென்னையில் துணை ஆணையராகவும் அண்ணா நகர் துணை ஆணையராகவும் இருந்தவர் அதேபோல சி பி சி ஐ டி பணியில் எஸ் பி ஆகவும் இருந்தவர். இந்த நிலையில் இவர் டி.ஐ.ஜியாக பதவியேற்று கோவை சரக டிஐஜியாக பணியில் இருந்து வந்தார். இவருக்கு சில நாட்களாக மன அழுத்தம் இருந்ததாக காவல்துறை தரப்பில் தற்பொழுது கூறப்பட்டுள்ளது.
 மன அழுத்தத்தின் காரணமாக சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மன உளைவில் ரீதியாக அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல இவர் டிஐஜியாக பதிவு உயர்வு பெற்றபோது அதே வேலையில் இவர் டி ஐ ஜியாக பதவி உயர்வு பெற்ற பிறகு இவருக்கு கோவையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் சென்னையில் வசித்து வந்துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ் இல் உள்ள இவருடைய வீட்டில் தனியாக  வசித்து வந்துள்ளார். தன் வீட்டு வாசலில் காவலில் இருந்த கன் மேன்  துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொண்டார். என்று காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.தொடர்ந்து இது குறித்து தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி ஜி பி அருண் கோவை விரைந்துள்ளார். அவர் நேரில் சென்று விசாரணை நடத்துவார் என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இவர் பணிசுமையால் தற்கொலை செய்து கொண்டாரா ? என பார்த்தோமே என்றால் இவர் ஏற்கனவே சட்ட ஒழுங்கு அதிகாரியாக இருந்தவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த போது 
சிறுசேரி ஐடிஐ நிறுவனத்தில் மென்பொரியாளாராக இருந்து  பணியாற்றிய உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது இவர்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்பி ஆக இருந்தார். அந்த வழக்கில் இவர்தான் திறம்பட செயல்பட்டார் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவரும் சிபிசிஐடியோடு இணைந்து வட மாநிலத்திற்கு சென்று அந்த வழக்கினுடைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை  வாங்கி கொடுத்ததில் அதில் இவருக்கும் அதிகப்படியான பங்கு உண்டு. அதேபோல சென்னையில் துணை ஆணையராக இருந்தபோது பெடரல் வங்கியில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போனது உடனடியாக கொள்ளையர்களை  கைது செய்தார் அதேபோல சிபிசிஐடியில் பணிபுரிந்த போது திறம்படவும் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார். புலனாய்வும் சரி சட்ட ஒழுங்கும் சரி பொறுமையாக விசாரணை செய்து எந்த பிரச்சினையாகும் இருந்தாலும் எளிதாக முடிக்க கூடியவர்.  காஞ்சிபுரம் கடலூர் நாகை அதிகப்படியான நாட்களில் சட்ட ஒழுங்கு அதிகாரியாக இருந்துள்ளார். இவர் தற்போது பணி சுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது வாய்ப்பு இல்லை என காவல்துறை வட்டாரத்தில் தெரிய வருகிறது. அவர் மன அழுத்தம் காரணமாக இருந்துள்ளதால் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது எனவும் காவல் துறை வட்டாரத்தில் தெரிய வருகிறது. அப்படி இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்திற்கும் இந்த தகவல் தெரிவித்து அவர் குடும்பம் இவரோடு 3 நாட்கள் தங்கி வசித்து வந்துள்ளனர்.  பிறகு தனியறையில் அவருடைய கன் மேன் துப்பாக்கி எடுத்து தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள செய்து கொண்டார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிய வந்துள்ளது. தற்போது தமிழக கூடுதல் சட்ட ஒழுங்கு டி ஐ ஜி அருண் அவர்கள் விசாரணை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments