புதுக்கோட்டை குளத்தூர் அருகே விவசாயத்தை ஆசிட் ஊற்றி அழிக்க மின்வாரியம் போட்ட திட்டம்!!.. புதுக்கோட்டை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா விவசாயத்தை பாதுகாக்குமா
புதுக்கோட்டை மாவட்டம் , குளத்தூர் தாலுகா , கண்ணங்குடி போஸ்ட் , கண்ணங்குடி , கிராமத்தில் பத்து ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர் அந்த கிராம மக்கள் அதில் கரும்பு, நெற்பயிர், உள்ளிற்றவைகளை விவசாயம் செய்து... அதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர். தற்பொழுது அந்த பகுதியில் உள்ள மின்னியற்றி (Transform) பழுதடைந்து விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் கடந்த இருபது நாட்களாக நெற்பயிர்கள் வாடுகின்றன.
இது சம்பந்தமாக மின் அலுவலகத்தில் பலமுறை. புகார் அளித்தும் மணு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு முறையும் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது நெற்பயிர்களை அழிப்பதற்கான முன்கூட்டியே திட்டமாக சந்தியாக்கப்படுகிறது என அந்த நிலத்தின் விவசாயி கண்ணீர் மல்க கூறினார். இப்போது பத்து ஏக்கர் விவசாய நிலமும் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது. உடனே புதுகோட்டை மாவட்ட நிர்வாகம் இதை சரி செய்து நெற்பயிர் அழிந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கமாறு விவசாய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment