கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 8 பேர் பலியான நிலையில் , 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்ளை மாவட்ட ஆட்சியர் சரயு ஆறுதல் கூறி வருகிறார்*
கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 8 பேர் பலியான நிலையில் , 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்ளை மாவட்ட ஆட்சியர் சரயு ஆறுதல் கூறி வருகிறார்*
கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் ரவி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு கிடங்கு இயங்கி வருகிறது.
இன்று காலை பட்டாசு கிடங்கில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் அருகில் இருந்த வீடுகள் மற்றும் பட்டாசு கிடங்கு தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றுவரும் 12 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக விசாரணையில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இந்த வெடி விபத்து நடந்திருக்க கூடும் என பட்டாசு கிடங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்கள் மற்றும் பர்கூர் திமுக எம்எல் ஏ மதியழகன் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் வந்து வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தும் , உயிரிழந்தும் உள்ளவர்களின் உறவினர்கள். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் குவிந்த நிலையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment