முக்கூடல் வடக்கு குமாரசாமியாபுரம் தெரு நாடார் உறவின்முறை கிளைச்சங்கம் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் 121வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

முக்கூடல் வடக்கு குமாரசாமியாபுரம் தெரு 
நாடார் உறவின்முறை கிளைச்சங்கம் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை  காமராஜர் 121வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, மாறுவேட போட்டி திருக்குறள் ஒப்பித்தல், ஓவிய போட்டி கடந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த  மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. எழை எளிய 120 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முக்கூடல் இந்து நாடார் சமுதாய தலைவர் P. பொன்னரசு, முக்கூடல் பேரூராட்சி மன்றத் தலைவர் 
L. லதா துணை தலைவர் இரா. லெட்சுமணன், மற்றும் R.S.P.S. லெட்சுமி நாராயணன்,M.S. முருகேசன், அன்பழகன், காசி, அண்ணாதுரை, உட்பட பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை கிளைச் சங்கம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Comments