ஒன்றிய அரசை கன்டித்து கோவையில் நடைபெற உள்ள பொதுகூட்டத்தில் பங்கேற்க்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் பேட்டி

ஒன்றிய அரசை கன்டித்து கோவையில் நடைபெற உள்ள பொதுகூட்டத்தில் பங்கேற்க்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் பேட்டி 


மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, அமலாக்கதுறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளதை கன்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று திமுக அனைத்து கூட்டணி கட்சிகளுடன் மாபேரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, இந்த பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள விமான மார்கமாக கோவை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது.. 
ஈவு இரக்கமற்ற , தான்தோற்றிதனமான முறையில்  ஆளுநர் ஆட்டம் போட்டு வருகின்றார், 
முதல்வருக்குதான் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் இருக்கிறது
இலாக்காவை,  பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கதனமானது, ஆயோக்கியதனமானது, என்றும், பி.ஜே.பியின் ஏஜென்டாக ஆளுநர்  செயல்படுகின்றார் என குற்றம் சாட்டியுள்ளார், மக்கள் தேர்வு செய்த்து தளபதி ஸ்டலினைதான், ஆர.என்.ரவியை இல்லை, ரவி மத்திய அரசின் ஒரு வேலைக்காரர் ஏஜென்ட் அவ்வளவுதான் முதல்வரல்ல, 
சர்வாதிகார்தை நிறைவேற்ற மோடி அரசு முயற்சிக்கிறது அதில் தோற்றுப் போவார்கள் என்று தெரிவித்த படி விடைபெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments