திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பெண் விஏஒ, வியாபாரி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வரகனேரி கல்பாளையத்தில் வசித்து வருபவர் வி.ஏ.ஓ கலைவாணி ஸ்ரீரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் ( MAJ traders ) என்ற கடையில் சமையலுக்கு புளி வாங்கி சென்றுள்ளார். இந்த புளி சரியில்லை உன்னிடம் தான் வாங்கினேன் என்று நேற்றிரவு (15.05.2023) கடைக்காரர் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் இப்ராஹிம் கடையில் இருந்த மற்ற பெண்கள் வி.ஏ.ஓ கலைவாணியை தள்ளிவிட்டு விரட்டி விட்டனர். உடனே வி.ஏ.ஓ அங்கு கடை வைத்திருந்த உறவினர்களை அழைத்து வந்து கேட்ட பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு கைகலப்பு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இரண்டு தரப்பினரும் மாறி மாறி விரட்டி விரட்டி தாக்கி அடித்துக் கொண்டனர். அங்கிருந்த பெண்களும், ஆண்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர். பெண்கள் பாத்திரம் பொருட்கள் காய்கறிகளை அள்ளி வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்ற இரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
இதனால் அந்த கடையில் இருந்த தக்காளி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சிதறியது வீணாய் போனது.. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..
விஏஓ உள்ளிட்ட இரண்டு தரப்பினரையும், காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.. எஸ்டிபிஐ வர்த்தக அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில்:-
கலைவாணி விஏஓ மீது பல ஊழல் புகார்களும் பல குற்றச்சாட்டுக்களும் உள்ளது என்றும் அந்த பகுதி பொது மக்கள் பலர் தெரிவிக்கின்றனர் அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தி கடையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வியாபாரிகளை ஒன்று திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்து கொண்டார்..
கடைசியில் இந்த அக்கப்போர் அரை கிலோ புளியில் வந்தது என்பது அனைவரையும் நகைப்பிற்குரியதாக்கி உள்ளது.
Comments
Post a Comment