தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பாப்பிரெட்டிப்பட்டி வருகை
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோவில் அடிவாரத்தில் தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கம் எம் டி எஸ் 948 சார்பில் இப்பகுதியை சார்ந்த கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பங்கு பெற்று அரசு நல திட்டங்களை பெற்று பயனடையும் வகையில் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது
இந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் வாரிய தலைவர் பொன் குமார் அவர்கள் பாப்பிரெட்டி பட்டிக்கு வருகை புரிந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டு அலுவலகத்தில் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராமன், மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட பொருளாளர் செந்தில் ,துணைத் தலைவர் சங்கர், துணை செயலாளர்கள் பேட்ரிக் அந்தோணி . நசீர், சங்க உறுப்பினர்கள் அண்ணாமலை, வடிவேல், பார்த்திபன், சீனிவாசன், செந்தில் மற்றும் ஏராளமான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment