*வேட்டையாடியவர்களிடம் வனத்துறை கிடுக்கிப்பிடி
ராமேஸ்வரம் : பாம்பன் குந்துகால் பகுதியில் ஏராளமான காக்கைகளை வேட்டையாடிய நபர்களை வனத்துறையினர் பிடித்தனர். இந்த காகங்கள் பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்ய வேட்டையாடப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.ராமேஸ்வரம், பாம்பன் அருகே குந்துகால் பகுதியில் காக்கைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் 50க்கும் மேற்பட்ட காகங்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அனைத்து காகங்களும் மருந்து வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்கே நகர் பகுதியை சேர்ந்த முத்து, பாக்கியராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோயில் பகுதி, தனுஷ்கோடி வனப்பகுதியில் ஏற்கனவே காக்கைகள் வேட்டையாடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறு வேட்டையாடப்படும் காகங்கள் அசைவ உணவு கடைகளில் பிரியாணி போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இதற்காக வேட்டையாடப்பட்டதாக என விசாரணை தீவிரமடைந்துள்ளது.
Comments
Post a Comment