திமுகவிற்குச் சென்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று சொல்லி நம்ப வைத்து துரோகம் செய்தவர் பழனியப்பன் - அமமுக கூட்டத்தில் வரலாறை சிதற விட்ட மணிமேகலன்

( 09-04-2023 ) தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிபட்டி அமமுக கட்சி சார்பில் இன்று  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட அமமுக கட்சி மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் 200 மேற்பட்ட தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.


 இந்நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலன் பேசியதாவது அதிமுகவில் இருந்து அமைச்சர் பதவியை பெற்று, புரட்சி தலைவி அம்மா இறந்த பின்பு அமமுக கட்சியில் அவர் இருந்தார் அப்போது நானும் ஒன்றிய செயலாளர் தங்கமணி  நமது மாவட்ட செயலாளர் TK ராஜேந்திரன் அண்ணா அவர்களும் கேட்டோம் என்னங்க நீங்க திமுகவில் இணைய போறீங்களாம் செய்திகள் வருதே அது உண்மையானும் கேட்டதற்கு அய்யோ நான் திமுகவில் இணைந்தால் அது செத்த பிணத்திற்கு சமானம் என்று கூறினார்  தற்போதுள்ள திமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் P பழனியப்பன்..  அவர் எப்படிபட்ட துரோகி என்று எங்களுக்கு தெரியும் நான் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிற்கும்போது 13 லட்சம் செலவு செய்து என்னை தோற்கடித்துவிட்டார். 

இது தெரியாமல் நான் பழனியப்பன் அவர்களுடன் பயணித்து கொண்டே இருக்கிறேன் இறுதியாக அவர் மனதிற்குள் மனசாட்சி தட்டி எழுப்பியுள்ளது அதனால் என்னிடம் கூறினார்..


 மணிமேகலன் உன்ன 13 லட்சம் செலவு செய்து தோற்கடித்து பின்பு கூட என்னிடம் நம்பிக்கையோடு இருக்கியே ரொம்ப சந்தோசமா இருக்கு என்றார்,  அப்போது நினைத்து கொண்டேன் துரோகம் செய்து பிழைக்க தெரிந்தவனுக்கு 

நிரந்தரமற்ற சந்தோசம் இருக்கும்,  ஆனால் நம்பிக்கைக்கு அடையாளமான வம்சத்திற்கு  கௌரவும்தான் இருக்கும் என்று மனதை  தேர்த்திகொண்டேன் நாங்க கௌரவத்தோடு வாழ்கிறோம் என்று மார்த்தட்டி சொல்லிகொள்வோம்..,

 பழனியப்பனால் சொல்லமுடியுமா, நிச்சயம் சொல்லமுடியாது திமுகவில் சலசலப்பு நடந்தால் கூட பழனியப்பன் வேறு கட்சிக்கு கூட குரங்கைபோல தாவி விடுவார், ஏனா அவருக்கு துரோகம் செய்வது ஒன்றும் புதிதல்ல   

தற்போது அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை நம் மக்கள் அறிந்துள்ளார்கள்.,

 அம்மாவிற்கு அவரை நம்பிய மக்களுக்கும், தொண்டர்களுக்கும், மிகப் பெரிய துரோகத்தை செய்துவிட்டு இங்கே நல்லவரைப்போல நாடகம் நடத்திகொண்டு இருக்கிறார். மறைமுகமாக பழனியப்பன்  மூலம் கூட்டு சேர நமக்கு தூதுவிடலாம் என்பது இங்கே கூடியுள்ள மக்களுக்கும் தருமபுரி மக்களுக்கும்  நன்றாகவே தெரியும். 

ஆகவே இவர்களைப்போல துரோகிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று தற்போதுள்ள திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மீது கடும் விமர்சனத்தை அமமுக கட்சி ஆலோசானை கூட்டத்தில் பேசப்பட்டது 

Comments